Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 23 ஜூன், 2012

உலகை அச்சுறுத்தும் உயிர்க் கொல்லி நோய்


resize_20110916093338

உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது.


நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம்.
இந்நிலையில் சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சிலவற்றைக் காணலாம்.
உலகம் பூராகவும் சுமார் 366 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் தெரிவிக்கும் அதேவேளை 344 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது.
வருடாந்தம் 4.6 மில்லியன் பேர் இதனால் உயிரிழக்கின்றனர்.அதாவது 7 செக்கனுக்கு ஒருவர் வீதம் இந் நோயினால் மரணிக்கின்றனர்.
வருடாந்தம் 465 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீரிழிவு நோய் எதிர்ப்புக்காக செலவழிக்கப்படுகின்றது.
2004 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 3.4 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் உயிரிழந்தனர்.
இந்நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில் 80% குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளிலேயே ஏற்படுகின்றது.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீதத்தினர் இதயம் சம்பந்தப்படட நோய்களாலும், பக்கவாதம் போன்ற நோய்களாலுமே இறப்பைத் தழுவ நேரிடுகின்றது.
நீரிழிவு நோயாளிகளில் 2 சதவீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னர் தமது பார்வையை இழப்பதுடன், 10 % பார்வைக் குறைபாடுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
நீரிழிவு நோயாளர்களில் 10 – 20 சதவீதமானவர்கள் சிறுநீரக கோளாறினால் இறக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக