இது ஹிஜ்ரா காலண்டரின் 8வது மாதம்.
ஷஅபான் என்ற பதத்தின் பொருள் : தொடர்ந்து உயர்வது (இடைவிடாமல் அதிகரிப்பது)
ஷஅபான் பிறை பிறந்து விட்டால் எண்ணிலடங்கா அருள்கள் நம் மீது பொழிய ஆரம்பிக்கின்றன. மழை துவங்கும்பொழுது சொட்டு சொட்டாக ஆரம்பித்து பின்னர் சோ வெனப் பெய்வது போல் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருள்கள் ஆரம்பித்து பின்னர் அருள் மழை சோ வெனப் பொழியும் இந்த மாதத்தில்.
இறுதியில் அருள்களின் மாதமான ரமலானில் கொண்டு போய் நம்மை இட்டுச் செல்லும் இந்த மாதம்.
இறுதியில் அருள்களின் மாதமான ரமலானில் கொண்டு போய் நம்மை இட்டுச் செல்லும் இந்த மாதம்.
எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “ஷஅபான் என்னுடைய மாதம். ரமலான் அல்லாஹ்வின் மாதம்.” (தைலமி)
நிகழ்வுகள்:
1. கிப்லா பைத்துல் முகத்தஸிலிருந்து கஅபாவை நோக்கி மாற்றப்பட்டது. இது ஹிஜ்ரி 2ம் ஆண்டு ஷஅபான் பிறை 15ல் நடைபெற்றது.
1. கிப்லா பைத்துல் முகத்தஸிலிருந்து கஅபாவை நோக்கி மாற்றப்பட்டது. இது ஹிஜ்ரி 2ம் ஆண்டு ஷஅபான் பிறை 15ல் நடைபெற்றது.
2. ரமலான் மாதம் நோன்பு நோற்பது ஹிஜ்ரி 2ம் ஆண்டு ஷஅபான் பிறை 25ல் கடமையாக்கப்பட்டது.
3. ஹிஜ்ரி 3ம் ஆண்டு அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
4. 42 வருடங்கள் கழித்து இதே மாதத்தில் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள்.
5. அண்ணலாரின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 4ம் ஆண்டு ஷஅபான் பிறை 5ல் பிறந்தார்கள்.
6. பனூ முஸ்தலிக் யுத்தம் ஹிஜ்ரி 5 அல்லது 6ம் ஆண்டு இந்த மாதத்தில் நடைபெற்றது.
7. இந்த யுத்தத்தில்தான் தயம்மும் செய்வது குறித்த இறைவசனம் இறங்கியது.
8. ஹிஜ்ரி 9ல் அண்ணலாரின் அருமைப் புதல்வி உம்மு குல்தூம் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக