15-வது வயதில் முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் முடிக்கலாம் – டெல்லி உயர்நீதிமன்றம்!
6 Jun 2012
புதுடெல்லி:வயதுக்கு வந்த முஸ்லிம் இளம்பெண்கள் 15-வது வயதிலேயே திருமணம் முடிக்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 வயது பூர்த்தியாகாமல் முஸ்லிம் பெண்களுக்கு அவர்களுடைய பெற்றோருடைய அனுமதி இல்லாவிட்டாலும் கணவருடன் வசிக்க இஸ்லாமிய மார்க்கம் அனுமதிப்பதாக நீதிபதிகளான ரவீந்திர பட், எஸ்.பி.மார்க் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.
இதுத்தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் கருத்துக்களையும் மேற்கோள்காட்டிய உயர்நீதிமன்றம், 15 வயது பூர்த்தியான முஸ்லிம் பெண்களின் திருமணம் செல்லுபடியாகும் என கூறியது.
16 வயது இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் முடித்ததாக குற்றம் சாட்டி அப்பெண்ணின் தாயார் தாஹிரா பேகம் சமர்ப்பித்த ஹேபியஸ் கார்பஸ்(ஆட்கொணர்வு மனு) மனு மீதான விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
தாஹிரா பேகத்தின் மனுவை தள்ளுபடிச் செய்த நீதிமன்றம், திருமணம் முடித்த அவரது மகள் தனது கணவர் வீட்டில் வசிக்கவும் அனுமதி அளித்தது. கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் முடித்த அந்த பெண், தற்பொழுது டெல்லி அரசின் கீழ் இயங்கும் காப்பகத்தில் தங்கியுள்ளார். தம்பதிகள் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒவ்வொரு ஆறு மாதம் கழியும் தோறும் சிசு பாதுகாப்பு மையத்தின் முன்னால் ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நன்றி: Thoothu Online
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக