பெரம்பலூர்: இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளிடம் கட்டணம் வசூலித்தால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச கட்டாயக்கல்வி உரிமையை அமல்படுத்துவது குறித்து சுயநிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் தரேஸ்அஹமது பேசியதாவது:
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும், அருகில் உள்ள பள்ளியில் தொடக்க கல்வி முடியும் வரை இலவசமாக, கட்டாயமாக்க கல்வி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுயநிதிபள்ளிகளில் குறைந்தது 25 சதவீத குழந்தைகளுக்கு கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என்று இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த பள்ளிகள் 25 சதவீத குழந்தைகளை தங்கள் பள்ளியில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான வரு மானம் கொண்ட பெற் றோர் குழந்தைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த பெற்றோரின் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தொடக்க கல்வி முடியும் வரையில் இலவச, கட்டாயக் கல் வியை வழங்க வேண்டும்.
குழந்தைகளை சேர்க்கும் போது எந்த ஒரு கல்விக்கட்டணமும் வசூலிக்க கூடாது. மீறி கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு வசூலித்ததைப்போல் 10 மடங்கு கட்டணம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் பள்ளியில் சேர்ப்பதற்காக எந்த ஒரு முன் தேர்வும் நடத்தப்படகூடாது. அதனை மீறி தேர்வு நடைமுறைக்கு உட்படுத்தும் பள்ளிகளின் மீது முதல் முறை ரூ.25 ஆயிரம் அபராதமும், தவறு செய்யும் அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு பள்ளியில் சேர்க்கப்படும் எந்த ஒரு குழந்தையும் தொடக்க கல்வி முடியும் வரையில் தோல்வி என்ற பெயரில் எந்தவொரு வகுப்பிலும் தொடர்ந்து இருக்க வைக்கப்படவோ, பள்ளியில் இருந்து வெளியேற்றவோ கூடாது. மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படு வார்கள்.
பள்ளிகளில் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத பள்ளிகள் குறித்த புகார் தெரிவிக்க விரும்பும் பெற் றோர் அலுவலக நேரத்தில் 04328-224200 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசி னார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி உள்பட கல்வித்துறை அலுவலர்கள், சுயநிதி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக