Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 ஜூன், 2012

பெரம்பலூர் : கலெக்டர் அறிவுறுத்தல்


பெரம்பலூர்: தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நபர்கள் யாரேனும் சிகிச்சை பெறவந்தால் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்கவும், அதன் இனப்பெருக்கத்தை தடுக்கவும் அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது: 
டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்கள் நல்ல நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். ஆகவே  குடிதண்ணீர், பிற உபயோகத்திற்கான தண்ணீரை சேமிக்கும் போது பாத்திரங்களையும், தண்ணீர்த்தொட்டிகளையும் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அலுவலர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பூந்தொட்டிகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், கவர்கள், டயர்கள் போன்றவற்றில் நீர் தேங்காமல் சுத்தம் செய்வது, அப்புறப்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். கொசுக்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும்.
இதற்காக ஊராட்சிகளில் களப்பணியாளர்களை கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கப்பட உள்ளது. பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 10 தற்காலிக களப்பணியாளர்களும், ஊராட்சி பகுதிகளில் ஊராட்சிக்கு ஒரு தற்காலிக களப்பணியாளரும் நியமித்து வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவும், தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அப்புறப்படுத்தவும், மற்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மருந்து அடிக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
 சுகாதார பணியாளர்கள் மருந்து தெளிக்க வரும் போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்கள் கொசு தடுப்பு மருந்துகள், கொசு வலை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்திருந்தால் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் அறிகுறியுடன் யாரேனும் வந்தால் அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நபர்கள் யாரேனும் சிகிச்சை பெற வந்தால் அந்த நபர்குறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் சம்பத்குமார், சுகாதார துணை இயக்குனர் மோகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அவநாசிலிங்கம், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக