Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 26 ஜூன், 2012

டெங்கு குறித்த சந்தேகத்திற்கு பரிசோதனை, கண்காணிப்பு அவசியம் மக்களுக்கு அறிவுரை


பெரம்பலூர்,:  டெங்கு குறித்து சந்தேகமிருந்தால் சிறப்பு பரிசோதனை, தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு திருச்சி மருத்துவ நிபுணர் அறிவுரை வழங்கினார்.
 திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் பெரம்பலூரில் டெங்குநோய் விழிப்புணர்வு குறித்து இந்திய மருத்துவ கழக ஆலோசனை கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது.
காவேரி மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் செல்லையா வரவேற்றார். இந்திய 
மருத்துவ கழக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் டாக்டர் கருணாகரன், டாக்டர்கள் திருமால், ராஜா முகமது முன்னிலை வகித்தனர். காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மகேந்திரன் ராமசாமி, விக்ரம் சிறப்புரையாற்றினர். மருத்துவ நிபுணர் டாக்டர் செங்குட்டுவன் பேசியதாவது:
டெங்கு காய்ச்சல், வைரஸ் எனப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றாகும். இந்நோய் தொற்று சில சமயம் வீரியம் குறைந்து சாதாரண காய்ச்சல் போல 3 அல்லது 5 நாட்களில் குணமடைய வாய்ப்பு அதிகம். ஆனால் சில பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தீவிர நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய நோய்களுக்கு அதிகப்படியான தலை மற்றும் வயிற்றுவலி, களைப்பு, எளிதில் எரிச்சல் அடைதல், ஈறுகளில் ரத்தக்கசிவு, உடலில் சிவப்பு படலங்கள் போன்ற அறி
குறிகள் காணப்படும். இது மேலும் தீவிரமடையும்போது வெளியேறும் சிறுநீரின் அளவு குறைந்து உடல் வீங்கி சுவாச கடினம் ஏற்படும். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்டவர் இறக்க நேரிடும்.
ஆரம்ப நிலையில் அளிக்கப்படும் சிகிச்சை நோயிலிருந்து விடுபட உதவும். இந்த நோய்தொற்று குறித்து சந்தேகமிருந்தால் சில சிறப்பு பரிசோதனை, தீவிர கண்காணிப்பு அவசியம். டெங்கு காய்ச்சலை தடுக்க ஊசிகளும், குணப்படுத்த மருந்துகளும் நடைமுறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. நோயின் வீரியத்தை குறைத்து உடலில் இழந்த நீர்ச்சத்தை ஈடுசெய்து தேவை ஏற்பட்டால் ரத்தம் அல்லது ரத்த அணுக்களை ஈடுசெய்வது அவசியமாகும். வீட்டிலும் வெளியிலும் தூங்கும்போது கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி நான்கு வகையான வைரஸ் என்பதால் இவை மறுதாக்குதல் நடத்த வாய்ப்புகள் அதிகமுள்ளது. இதில் உயிரிழப்பு குறைவென்றாலும் நோயின் தாக்கம் அதிகம் என்றார்.
டாக்டர்கள் பால்ராஜ், சிவக்குமார், அறிவழகன், சுமதி செங்குட்டுவன், நளினிதேவி, ஆனந்தமூர்த்தி, வல்லபன், செந்தில்குமார், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக