Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 29 ஏப்ரல், 2015

ஒரு வரலாற்று கடமை – தொடர் 1

இவ்வளவுதான் – இதற்கு மேல் அம்பேத்கர் இல்லை !
நீங்கள் என் வாழ்கையில் இருந்து கற்று கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால் அது நான் என் சமூகத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான் என் வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும் துயரத்திலும் நான் பங்கேற்பதில் பெருநிறைவு கொள்கிறேன்.

- அம்பேத்கர்
பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய பிரதேச மாகாணத்தில் மஹாவோ என்ற ஊரில் மராத்திய பின்னணியை கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் சுபெதாராக பனியாற்றி கொண்டிருந்த ராம்ஜி மலோஜி சக்பால் என்பவருக்கும் பிமாபாய் மூர்பாதர் சக்பால் என்ற பெண்ணுக்கும்  1891 ஆண்டு ஏப்ரல் 14  தேதி சிறு குழந்தையாக இயற்கை நீதிகளுக்கு உட்பட்டு இயல்பாகத்தான் அந்த குழந்தை பிறந்தது.
ஆனால் மனித இயல்புக்கு மாற்றாக இயற்கை நீதிக்கு புறம்பான இந்து மதத்திற்கும் இந்தியாவிற்கும் மட்டுமே உரித்தான சாபக்கேடாகிய  சாதிய அடையாளத்தை தன் மீது சுமந்து பிறந்தது.
தந்தைக்கு ராணுவத்தில் பனி பொருளாதார பிரச்சனைகள் இல்லை. அந்த குழந்தையை நல்ல முறையில் பராமரித்து வளர்க்க போதுமான ஊதியம் என்று  நிறைவாகவே  அந்த பிள்ளையின் வாழ்வு  சென்று கொண்டிருந்தது.

ராம்ஜி மலோஜி சக்பால் தன் குழந்தையை ஹிந்து மத பாரம்பரிய இலக்கியங்களை படிக்க வைக்க விருப்ப பட்டார், இதற்காக தனது ராணுவ பணியின் செல்வாக்கை பயன் படுத்தியும் அன்றைய அரசு பள்ளிகூடத்தில் சேர்க்கவே பெரும் பாடுபட வேண்டியதாகி விட்டது.
அவரின் சாதிய அடையாளத்தை காரணம் காட்டி  அவருக்கு அரசு பள்ளியில் படிக்க எதிர்ப்புகள் மேலோங்க அவர் தந்தை தம் செல்வாக்கை பயன்படுத்தி  ஒரு வழியாக பள்ளி கூடத்தில் சேர்த்துவிட்டார் ஆனால் அந்த சிறுவன்  தான் கல்வி கற்க மறுக்கப்பட்ட வாய்ப்புகள் எதுவும் அறியாதவனாக தன் தந்தையை பின்தொடர்தான்.
பள்ளிக்கூட பதிவேட்டில் தன் மகனின் பெயர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்  என பதித்தார் (Bhimrao Ramji Ambavadekar) ஆனால் ராம்ஜி மலோஜி சக்பால் அறிந்திருக்கவில்லை இதோடு அம்பேத்கர் முடிந்தான் என்று. 
தொடரும்……
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக