Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 ஏப்ரல், 2015

ஒரு வரலாற்று கடமை – தொடர்…

அம்பேத்கருக்கு என்றும் தேசமே பெரிதாக இருந்தது அப்படிப்பட்ட மகோன்னதமான மனிதரை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் வெறுமனே அவரது பிறந்த நாளில் ஒன்றுகூடி நினைவு செலுத்தி விட்டு களைவது என்பது போதுமானது அல்ல, மேலும் எப்படிப்பட்ட சமூகத்தை கட்டி எழுப்ப அவர் தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்டாரோ அந்த சமூகத்தை கட்டி எழுப்ப நாம் அரும்பாடு படவேண்டும்.
ஹெட்கேவாரும் அம்பேத்காரும் ஒரே காலகட்டத்தில் பிறந்தவர்கள் ஹெட்கேவார் (ஏப்ரல்1)1889

ஆண்டும் அம்பேத்கர்1891ஆண்டும் பிறந்ததார் இருவருமே மருத்துவர்கள், இருவரும் சமூக நோய்களை களைபவர்களாகவும் சமூக நோய்ககளுக்கு மருந்திடுபவர்களாகவும் இருந்தனர், இருவருக்குமே பாரதத்தின் வளர்சியும், சமூக தீமைகளை களைவதுமே பிரதான நோக்கமாக இருந்தது
- பாஹியாஜி ஜோஷி (R.S.S.)
( Dr Hedgewar and Babasaheb were born around the same time—one in 1889 and the other in 1891. Both were doctors but used their skills to cure the social ills. The objectives of both were also same—upliftment of the nation, eradication of social ills, awakening the society and restoring pristine glory of Bharat.” – Bhaiyaji Joshi )
(Source : http://organiser.org//Encyc/2015/4/18/Report—Understand-Babasaheb-in-holistic-perspective-)

கடந்த ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கரின் 125 பிறந்த நாள் விழா மாநாட்டில்  இவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டது.
வரலாற்றை தன் நலன் சார்ந்து திரிப்பது என்பது பாசிஸத்தின் குணாதிசயங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததே, அதன் அங்கமாகவே இந்துத்துவா சக்திகள் இன்று அம்பேத்கரை இந்துத்துவ மயமாக்கும் செயல்களில் அதிதீவரமாக இறங்கியுள்ளனர், காரணம் அம்பேத்கரையும் ,இந்து மதத்தையும் வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் rss இன்று உருவாகியிருக்கிறது ஆனால் தான் வாழ்ந்த காலத்திலும் தான் மரித்த பின்பும் அம்பேத்கருக்கு இந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்தவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.
தன் வாழ்நாள் முழுக்க எந்த ஆதிக்க சாதியினருக்கு எதிராக அம்பேத்கர் போராடினாரோ அந்த அம்பேத்கரையும் அதே ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட ஹெட்கேவரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக பேசியிருப்பது அம்பேத்கரை இழிவுபடுத்தும் செயலாகும், ஒப்பீட்டு அளவில் கூட அம்பேத்கருடன் இணைத்து பேச தகுதியற்றவர் ஹெட்கேவார் என்னும் ஹிந்துத்துவவாதி.
கருத்தியல் ரீதியாக இரு நபர்களை ஒப்பு நோக்காமல் அபத்தம் நிறைந்த ஒப்பீடுகளை முன்வைப்பது ஆர்.எஸ்.எஸ் உடைய கருத்தியல் வறட்சியை அப்பட்டமாக வெளிபடுத்தி இருக்கிறது.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1) அம்பேத்காரும் ஹெட்கோவரும் ஒரே கால கட்டத்தில் பிறந்தவர்கள் என்று பேசியிருப்பது இது எவ்வாறு இருக்கிறது எனில் ஏப்ரில்1 முட்டாள் தினத்தில் பிறந்ததால் ஹெட்கேவாரையும் முட்டாளாக பாக்கும் பார்வைக்கு நிகரானது.
2) ஹெட்கோவர் ஒரு மருதுவர் (டாக்டர்) அம்பேத்கரோ முனைவர் (டாக்டரேட்) இருவரும் டாக்டர்ஸ் என்று வரலாற்று பாடம் எடுத்திருக்கும் இந்துத்துவா அபேத்காரின் வரலாற்றை எவ்வளவு வரலாற்று அபத்தங்களுடன் திரித்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பது அப்பட்டமான உண்மையாக வெளிப்பட்டுள்ளது.
இந்த பத்துபேர் கொண்ட குழுவால் தான் பிரதமர் மோடியின் ஒவ்வொரு உரைகளும் தயாரிக்க படுகிறது போலும் காரணம் மோடியின் ஒவ்வொரு உரையிலும் இது போன்ற எண்ணற்ற வரலாற்று அபத்தங்கள் நிறைந்து இருப்பதை நாம் காண்கிறோம்.
3)  தேசத்தின் வளர்ச்சி என்பது பெரும்பான்மை வஞ்சிக்க பட்ட மக்களின் வளர்ச்சியும் அவர்களின் சமூக விடுதலையுமே தேசத்தின் வளர்ச்சி என்று இயங்கியவர் ஆனால்  ஹெட்கேவரோ சனாதான தர்மத்தை நிறுவுவதன் மூலம் பார்பனியத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமை படுத்தும் சமூக கட்டமைப்பை துக்கி பிடித்து தேசத்தின் விழ்ச்சிக்காக இயங்கியவர்.
மிகச்சரியான ஒப்புநோக்கானது சமூக நோய்களை ஹெட்கேவார் உருவாகினார், நோய் பரப்பும் கிருமியையும்  சமூக நோய்களையும் களைந்தெரிய அம்பேத்கர் போராடினார் என்பதே.
அம்பேத்கரின் போராட்டத்திற்கான தேவை இன்றும் பல்வேறு தளங்களில் பல்கி பெருகி நிற்கிறது அந்த போரட்டத்தின் ஒரு அங்கமாக அம்பேத்கரின் கருத்துகளை இந்துமயபடுத்தும் இந்துத்துவாவின் சதிகளில் இருந்து அம்பேத்கரின் கருத்துகளையும்  எந்த மக்களுக்காக அம்பேத்கர் அரும்பாடு பட்டரோ அந்த மக்களையும் மீட்டெடுக்க வேண்டிய வரலாற்று கடமை எமக்கு இருபதாகவே யாம் நம்புகிறோம்.
இதுவும் சமூக எழுச்சி போராட்டத்தின் ஒரு அங்கமே, இந்த போராட்டத்தை மிக வலிமையாக முன்னெடுக்க வேண்டிய காரணம்.
2004 திருச்சியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிசத் மாநாட்டில் அதன் தலைவர் அசோக்
சிங்கால் பேசும்போது நாம் என் எம் தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்குகிறோம் என்றால் அதன்
முதல் கூறு முஸ்லிம்களை நோக்கி தாக்கட்டும்,இரண்டாம் கூறு கிறிஸ்தவர்களை நோக்கி தாக்கட்டும் மூன்றாம் கூறு இந்துத்துவாவை ஏற்று கொல்லாத இந்துக்களை நோக்கி தாக்கட்டும் என்று சமூகதிற்கு இடையில் வெறுபுணர்வை விதைத்தார்.
யார் எல்லாம் இந்த விடுதலைக்காக அரும்பாடு பட்டார்களோ அவர்களின் வாழ்வையும் ,கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் முதல் தாக்குதளுக்கு முன்பே அந்த திரிசூலத்தின் கூர்மையை மழுங்கடிக்க முடியும் அவ்வாறு மழுங்கடி பதன் மூலம் ஏனைய மக்களின் பாதுகப்பை ஊர்ஜிதப்படுத்த முடியும்.
அந்த அடிப்படையில் அம்பிகளின் அம்பிகள் அம்பேத்கரை முழுமையாக படிக்கஅறைகூவல் விட்டிருப்பதால் அம்பேத்கரை முழுமையாக படிபோம் அதன் மூலம் அம்பிகளிடம் இருந்து அம்பேத்கரின் தம்பிகளை மீட்கும் வரலாற்று கடமையை முன்னேடுபோம்
இனைதிருங்கள் நமது வரலாற்று கடமையை தொடர…

- ஜிப்ரில்
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக