Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 13 ஏப்ரல், 2015

இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !

இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !
கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.

இதற்காக, தேசிய பாதுகாப்பு நிதி (National Defense Fund) என்ற பெயரில் நிதி வழங்கிடும்படி அன்றைய குறுநில மன்னர்களுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.
நிதி நெருக்கடியால் பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார்.
இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார், லால் பகதூர் சாஸ்திரி.
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நேரில் சென்று சந்தித்தவர், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).
ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நாட்டின் மோசமான நிதி நிலைமையை விளக்கினார்.
கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம், மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார்.
தனது கருவூலத்திலிருந்து 'ஐந்து டன்' எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார்.
(நிஜாம் வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600
கோடிகளுக்கும் மேல்)

பாதுகாப்பு நிதி கேட்டால், தனது சொத்தின் பெரும் பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு, மற்ற குறுநில மன்னர்களிடம் பரவி பெரும் சர்ச்சையானது.
இன்றைய தேதிவரை, இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ - ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த்திகழ்ந்த ஹைதராபாதின் கடைசி நிஜாம், 24-02-1967அன்று காலமானார்.
இது[போன்ற வரலாறுகளை தான் இன்றைய பாஜக அரசு, மறைக்க பார்க்கிறது, இவைகளை தீயிட்டு கொளுத்திவிட்டு, வரலாறுகளை திரிக்கப்பார்க்கிறது.
நன்றி : தீனதயாளன்-ஜெகதீசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக