Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 ஏப்ரல், 2015

பத்தாவது படித்தவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் வேலைவாய்ப்பு ...


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசு பள்ளிகளில் LAW - Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்களை தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்க்கான விளம்பரம் அந்தந்த மாவட்ட பத்திரிகைகள் தினத்தந்தி, தினமணி, Indian Express, மற்றும் (22,23,24,4,15 ) ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
  • குறைந்த பட்சம் கல்வி தகுதி 10th
  • வயது (BCM) - 18 to 32
  • தேர்வு முறை: சாதாரண தேர்வு முறை
  • ஆதரவற்ற விதவை பெண்கள் - உயர்கல்வி படித்திருந்தால் வயது வரம்பு தேவை இல்லை. 
  • இணையதளம்: www.tndge.in
  • இட ஒதுக்கீடு முறைப்படி மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • சம்பளம்: Rs.23.000
நமதூர் / நமது சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?



மின்னஞ்சல் மூலமாக
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக