Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 ஏப்ரல், 2015

ஈரோட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற TNTJ வின் 16 வது மாநில பொதுக்குழு , புதிய மாநில நிர்வாகிக‌ள் தேர்வு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 16வது மாநில பொதுக்குழு கூட்டம்
ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் இன்று மிகச்சிறப்பாக துவங்கியது. இதில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆதரவாளர்கள் அலைகடலென திரண்டுள்ளனர்.




- புதிய நிர்வாகிகள் தேர்வு!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 16வது பொதுக்குழு ஈரோட்டிலுள்ள பிளாட்டினம் மஹாலில் நேற்று (26.04.15 ஞாயிறு) நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலாவின் படி மாநில மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தியது. மேலாண்மைக்குழு நியமனம் செய்யும் தேர்தல் அதிகாரி ஒருவர் தேர்தலை நடத்துவார் என்ற பைலா விதியின் படி மாநில மேலாண்மைக்குழு நிர்வாகம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தேர்தல் அதிகாரியாக நியமித்தது.

அந்த அடிப்படையில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக முன்னின்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
அதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் :

மாநிலத் தலைவர் : ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி
மாநிலப் பொதுச் செயலாளர் : முஹம்மது யூசுப்
மாநிலப் பொருளாளர் : கலீல் ரசூல்
மாநிலத் துணைத் தலைவர் : எம்.ஐ.சுலைமான்
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்: தவ்ஃபீக்

மாநிலச் செயலாளர்கள் :
எம்.எஸ்.சுலைமான்
சிராஜுதீன்
ஆவடி இப்ராஹீம்
திருவாரூர் அப்துர்ரஹ்மான்
மயிலை அப்துர்ரஹீம்
இ.முஹம்மது
நெல்லை சையது அலி
நெல்லை யூசுப் அலி
சேப்பாக்கம் அப்துல்லாஹ்
இ.ஃபாரூக்

இந்த புதிய நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். தாவா பணிகளை வீரியமாக கொண்டு செல்ல வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
ஷம்சுல்லுஹா ரஹ்மானி
மாநில மேலாண்மைக்குழு தலைவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக