Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 ஏப்ரல், 2015

சாயம் வெளுக்கிறது…

நமது நாட்டின் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பல அயல்நாட்டு சுற்றுபயணத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவில் வெளியான ஒரு செய்தி பலரின் கவனத்தையும்  ஈர்த்தது. அந்த செய்தி என்னவென்றால் பாராளுமன்றத்தில் NDA தலைமையினால் அமைக்கப்பட்ட ஆட்சி 10 மாதங்களை கடந்துள்ளது (300 நாட்கள்).இந்த 300 நாட்களில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களை அவர் செய்யவில்லை என்று
எல்லோருக்கும் தெரியும்,ஆனால் செய்தி அதுவல்ல கடந்த 300 நாட்களில் மோடியின் செல்வாக்கு மக்களிடையே எவ்வளவு இருக்கிறது என்று இந்தியா டுடே என்னும் ஆங்கில பத்திரிகை ஆய்வு நடத்தியது. இதன் முடிவுகள் ஊடங்களில் வெளியானதும் பி.ஜே.பி கட்சிகாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது.சிறப்பான ஆட்சி நடத்துகிறார் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 %பேர் கூறியிருந்தார்கள்.தற்பொழுது அது 38%ஆக குறைந்துள்ளது.சராசரியான ஆட்சி என்று ஆகஸ்ட் மாதம் 28% பேர் கூறியிருந்தனர்.அது தற்பொழுது 26%ஆக குறைந்துள்ளது.
மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6%பேர் கூறியிருந்தனர்,தற்பொழுது அது 11% ஆக அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்கை தரம் உயர்ந்துள்ளதா என்று கேட்டதற்கு கடந்த ஆண்டை விட 1% க்கும் அதிகமாக மோசமாக உள்ளது என்று கூறியிருந்தனர்.இந்த சரிவிற்கு மிகமுக்கிய காரணமாக கூறபடுவது மாத ரீதியான விமர்சினங்களும்,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலையீடும், அடிப்படை பொருட்களின் மற்றும் மருந்துகளின்  விலைஉயர்வும்,பொருளாதார வளர்ச்சிக்கு திட்டம் இதுவரை கொண்டுவராமல் இருப்பதும் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டை அடமானம் வைக்கும் போக்கை கடைபிடிப்பதும் தான்.இப்படி பல பிரச்சனைகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி உலகநாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்வதும் மக்களிடைய நம்பிக்கையின்மையை உருவாக்கி இப்படிபட்ட முடிவை தந்துள்ளது.இன்னும் காலம் போகப்போக இவர்களுடைய சாயம் வெளுக்கும்…..
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக