Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 6 ஏப்ரல், 2015

2050-ஆம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!-ஆய்வில் தகவல்!


அமெரிக்காவிலுள்ள ப்யூ ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் உலக மதங்களின் எதிர்காலம் என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் மக்கள் தொகைப் பெருக்க விகிதம் அதிகமாக இருப்பதும் முஸ்லிம்களில் 34 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதுமே இதற்குக் காரணம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எதிர்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இந்தியாவில்தான் வசிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தோனேஷியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் உலக அளவில் இந்துக்களின் மக்கள் தொகை 34 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் சற்று அதிகமான இந்து மக்கள் தொகை, 140 கோடியா அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்துக்களைப் பொறுத்தவரை, ஒரு பெண் 2.4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார். மேலும், 30 சதவீத இந்துக்கள் 15 வயதுக்குக் கீழ் உள்ளனர். ஆனால், 15 வயதுக்குக் கீழ் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம்.
2050 வாக்கில் ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கும் என்றும், 2070ல் உலக அளவில் அவர்கள் கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புத்த மதத்தைப் பொறுத்தவரை, 2010ல் எந்த எண்ணிக்கையில் இருந்ததோ, அதே எண்ணிக்கை நீடிக்கும். உலகில், ஒவ்வொரு மதத்திலும் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை, எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய வயது, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சர்வதேச அளவில் இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக ப்யூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி புதிய விடியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக