Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 ஏப்ரல், 2015

விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை!-ஆம் ஆத்மி-பா.ஜ.க பரஸ்பரம் குற்றச்சாட்டு!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் விவசாயிகள் பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி மரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலைச் செய்துகொண்டார்.இச்சம்பவத்தைக் கண்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு முன்பாக இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.விவசாயி தற்கொலைச் செய்வதை கெஜ்ரிவால் மேடையில் இருந்து கண்டபோதும் எதுவும் செய்யவில்லை என்றும் விவசாயி மரணித்த பிறகும் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் உரையை தொடர்ந்ததாகவும், பேரணியை நிறுத்தவில்லை என்றும் இளைஞர் காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் என்று பா.ஜ.கவும் குற்றம் சாட்டியுள்ளது.
அதே வேளையில் தற்கொலைச் செய்த விவசாயி பா.ஜ.கவின் ஏஜண்ட் என்றும், ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் பிஸ்வாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகள் பேரணி நடைபெற்ற தினத்தன்று காலை 11 மணிக்கு தற்கொலைச் செய்த விவசாயி கஜேந்திரசிங் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை அவரது வீட்டில் சென்று சந்தித்ததாக கஜேந்திரசிங்கின் ஜெய்வீர்சிங் தெரிவித்துள்ளார்.ஏன் கஜேந்திரசிங்கை காப்பாற்ற முடியவில்லை? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஆம் ஆத்மியின் தலைவர்களும், தொண்டர்களும் தான் விவசாயி கஜேந்திர சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்றவர்கள் செய்த இடையூறுகளால் தான் போலீசாரால் விவசாயியைக் காப்பாற்ற இயலவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக