அங்கன்வாடி மையங்களில் கண்களை பாதுகாக்க, நோய் தொற்றுகளை தடுக்க இன்று முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவ மருந்து வழங்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் 27ம் தேதி வரை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் தரேஸ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது
வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுவதால், குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு, நிமோனியா, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்கள் வருவது குறைக்கப்படுகிறது.
எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து குழந்தைகளின் கண்ணொளி காக்க இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
மேலும் ஆண்டுக்கு 2 முறை 6 மாதத்திற்கு ஒருமுறை என 5 வயது வரை தவறாமல் இந்த திரவ மருந்து கொடுக்க வேண்டும் என்றார்.
சுகாதார பணிகள் துணை இயக்குனர், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர், குடும்பநல துணை இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அம்மாப்பாளையம், வாலிகண்டபுரம், காரை, லப்பைக்குடிகாடு வட்டார மருத்துவ அலுவலர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் கலந்து கொண்டனர்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக