Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 19 செப்டம்பர், 2013

நமதூர் வங்கியில் பெண்ணிடம் பணம் பறிப்பு...

பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு  வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங் கூரை சேர்ந்தவர் சரவணன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(32). இவர் கடந்த ஒரு வருடத் துக்கு முன், பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடி காட்டில் உள்ள ஒரு வங்கி யில் நகைகளை அடகு வைத்திருந்தார். அந்த நகை களை மீட்பதற்காக இந்திரா ரூ.1 லட்சம் பணத்�துடன் நேற்றுமுன்தினம் மதியம் அந்த வங்கிக்கு வந்தார்.
வங்கி வாசலில் உள்ள சிமென்ட் சிலாப்பில் உட்கார்ந்து செலானை எழுதிக் கொண்டிருந்தார். பணத்தைதான் கொண்டு வந்திருந்த ஒயர் கூடையில் வைத்திருந்தார். அப்போது செல்போனில் அழைப்பு வந்ததால், அதை எடுத்து பேசிக் கொண்டிருந்தார்.
பேசி முடித்துவிட்டு பையை பார்த்தபோது, அதில் இருந்த பணத்தை காணாதது கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுபற்றி மங்களமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணி யன் வழக்குப்பதிந்து, பண த்தை திருடி சென்ற மர்ம நபரை தேடிவருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக