பயான் கலாச்சாரத்திற்கு துணைபோகும்
தாருஸ்ஸலாம் தவ்ஹித்
பள்ளிவாசல்
கடந்த சில காலங்களாகவே நமது தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் மஹரிப் தொழுகைக்கு பிறகு பின் சுன்னத் தொழுவதை காட்டிலும் முதலாவது கடமையாக பயான் செய்த பின் சுன்னத் தொழுகை தொழுது கொள்ளுமாறு மக்களை மறைமுகமாக நிர்பந்தம் செய்து வருகிறார் பள்ளி இமாம் அவர்கள்.
இது நாள் வரை பர்ளு தொழுத பிறகு பின் சுன்னத் தொழுவது வழக்கமாக
வைத்திருந்தவர்கள் இப்பொழுது இவர்கள் சொல்லும் பயானை கேட்டபிறகுதான் பின் சுன்னத் தொழுது கொள்ள வேண்டிய நிர்பந்ததிர்க்கு ஆளாகியுள்ளனர். காரணம் பயான் சொல்லக்கூடிய இமாமுடைய சத்தம் (ஒலி பெருக்கி) தொழுகைக்கு இடையூராக உள்ளமையால் சிலர் பயானையும் கேட்காமல் பின் சுன்னத்தும் தொழாமல் அப்படியே எழுந்து சென்றுவிடுகின்ற சூழ்நிலை வந்து கொண்டுள்ளது.
தொழுகை அனைத்தும் முடிந்த பிறகு
இவர்கள் பயான் செய்தால் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும் கலந்து
கொள்வார்கள், இது யாருக்கும் எந்த ஒரு பாதகமும் இருக்காது என்பது அனைவரும்
அறிந்ததே, ஆனால் பின் சுன்னத் தொழுபவர்களுக்கு இடையூராக இவர்கள் செய்வது இவர்களுடைய
ஜமாத்தை சாராதவர்களுக்கும் நடுநிலையாலர்களுக்கும் சிரிது எரிச்சலை உண்டு
பன்னுகின்றது. காரணம் இவர்கள் சொல்லுகின்ற அனைத்தும் அப்பள்ளிக்கு தொழவருபவர்கள்
கேட்க வேண்டிய அவசியமும் நிர்பந்தமும் இல்லை. இதை கருத்தில் கொண்டு
தெழுபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் பிறகு
இவர்களுடைய பயானை தொடர்ந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்பது
நடுநிலையலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக