Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

திருச்சி தவ்ஃபீக் சுல்தானா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தலைநகர் டெல்லியில் ஓடும்பேருந்தில் துணை மருத்துவக் கல்லூரி மாணவி வன்புணர்ந்துத் தாக்கப்பட்டது;
மும்பையில் ஊடகக் கலைஞர் கூட்டாக வன்புணரப்பட்டது ஆகிய செய்திகளின் வரிசையிலமைந்த கொடூரமான செய்தியாக திருச்சியில் பள்ளி மாணவி தவ்ஃபீக் சுல்தானா கொடூரமாக வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியும் ஒன்று.
வட இந்தியாவில் நிகழ்ந்த; நிகழ்கிற துர்ச்சம்பவங்களுக்குக் கிடைக்கிற ஊடக முக்கியத்துவமும், நாடு தழுவிய விழிப்புணர்வும் தென்னிந்தியச் செய்திகளுக்குக் கிடைப்பதில்லை என்பதற்குச் சான்றாகவும் இச்செய்தி விளங்குகிறது.  இந்நிலையில் மாணவி தவ்ஃபீக் சுல்தானா வன்புணர்ந்து 
கொலை செய்யப்பட்ட  வழக்கை சிபிசிஐடி வசம் மாற்ற வேண்டும் என்று SDPI போன்ற கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துவந்தன.
SDPI கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் M.நிஜாம் முஹையதீன் தலைமையில் சென்னையில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அவர்களை நேரில் சந்தித்து வழக்கை சிறப்புப் புலனாய்வு காவல் குழுமத்திற்கு (CBCID) விசாரணைக்கு மாற்ற மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இக்கோரிக்கையை ஏற்று, இவ்வழக்கு சிறப்புப் புலனாய்வு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி இன்நேரம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக