பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றன.
ஜூலை முதல் வட்டாரத்துக்கு 10 பேர் என நியமிக்கப்பட்ட களப்பணியாளர்கள், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏ.டி.ஸ். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.
இதுவரை 18,000 இடங்களில் அத்தகைய கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் முதல்கட்டமாக 10 நகராட்சி களப்பணியாளர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, நகராட்சி முழுவதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், 25 கடைகளில் தேவையற்ற டயர்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மழைக் காலம் தொடங்கிவிட்டதால் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி தேவையற்ற பொருள்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். டயர், ஆட்டு உரல், தொட்டி போன்றவற்றில் ஏ.டி.ஸ். கொசுப்புழு வளர்வதைக் கண்டறிந்து, அவற்றை அழிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மூன்று நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் தொட்டி, டிரம்களை கழுவ வேண்டும்.
தண்ணீரில் கொசு புகாத வகையில் மூடிவைக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் டெங்கு குறித்து நமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள பயனுள்ள தகவல்களை கீழே இனைத்துள்ளோம்.
1.டெங்கு காய்ச்சல் சில தகவல்கள்
2.டெங்கு குறித்த சந்தேகத்திற்கு பரிசோதனை, கண்காணிப்பு அவசியம் மக்களுக்கு அறிவுரை
3.பெரம்பலூர் : கலெக்டர் அறிவுறுத்தல்
4.டெங்கு காய்ச்சல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக