நரேந்திர மோடியின் தமிழக வருகையை ஒட்டி தமிழகமே மோடியை வரவேற்கத் தயாராகி விழாகோலம் பூண்டு காத்திருப்பது போல் சங்பரிவாரக் கும்பல்களின் சதிக்கும், சல்லிக்கும் பலியான ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இல்லை இது இது பெரியாரும் அண்ணாவும் பயிற்றுவித்த மண் இங்கு மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை எடுத்து சொல்ல மகஇக, மே 17 இயக்கம் போன்ற பல்வேறு முஸ்லிமல்லாத அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம் அமைப்புகளில் பெருமபாலனவை மவுனம் காப்பது ஏன் என்று விளங்கவில்லை!
தடா ரஹீமின் இந்திய தேசியலீக் , பாப்புலர் ப்ராண்ட் தவிர பெரிய அளவில் எதிர்ப்புகளை பார்க்க முடியவில்லை ! தாங்கள்தான் தமிழகத்தின் பெரிய கூட்டம் என்று சொல்லும் ததஜ இத்தனை ஆண்டுகள் கழிந்து மோடி எதிர்ப்பு என்பது தேவையற்றது என முடிவு செய்து அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் விஷ வித்தை விதைக்க வரும் பொது எதிர்க்காமல் அன்றைக்கு ஜெயலலிதா வீட்டு விருந்துக்கு வந்ததற்கு ஏன் எதிர்த்தார்கள் என்பது புரியவில்லை ! பல ஆண்டுகள் கழிந்த நிலையில் 2011-ல் கூட மோடி எதிர்ப்பு ஆர்பாட்டம் ஏன் நடத்தினார்கள் என்று விளங்கவில்லை !
அவர்கள எப்போதும் தனி வழிதான் ! அவர்களை விடுங்கள் !
தமுமுக போன்ற சமுதாய அமைப்புகள் சத்தமில்லாமல் இருப்பது ஏன் என்று விளங்க வில்லை! முஸ்லிம்கள் தங்களின் வலுவான எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்தால் இங்குள்ள ஜனநாயக, மதசார்பற்ற அமைப்புகள் அவங்களுக்கே அக்கறை இல்லை நமக்கெதற்கு வீண் வேலை என நினைக்கலாம் ! மேலும் மோடியுடன் கூட்டணி வைக்கக் காத்திருப்போருக்கு நமது எதிர்ப்பு ஒரு எச்க்கரிக்கையாக அமையலாம் !
பல தெயவங்களை வணங்கி, பல்வேறு சாதிப் பிரிவுகளாகவும், கொள்கைப் பிரிவுகளாகவும் இயங்கும் இந்து அமைப்புகள் மோடிக்கு முடிசூட்ட ஓரணியில் நின்று பேரணி நடத்தும் போது இறை ஒன்று, மறை ஒன்று, எனும் சமுதாயம் ஏன் இந்த விஷயத்தில் ஒன்றுபட முடியவில்லை? நம் எதிரிகள் நம்மைக் குறித்து தெளிவாக இருக்கும் நிலையில் நம் எதிரி யார் என்பது தெரிந்தும் இதில் தெளிவில்லாமல் இருப்பது ஏன்?
ஆகையால் அனைத்து அமைப்புகளும் உடனடியாக ஆலோசித்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் ! ஆர்பாட்டம் போராட்டமாக இல்லா விட்டால் கூட 3000 முஸ்லிம்களைக் கொன்ற மோடியை எதிர்த்து குறைந்த பட்சம் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்யலாம் ! இதை தங்கள் அமைப்புகளிடத்தில் சொல்லி மோடிக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்யுமாறு அனைத்து சகோதரர்களும் தலைவர்களிடம் எடுத்துச் சொல்வோம் !
- செங்கிஸ் கான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக