இறப்பு செய்தியை எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி என்றாலே... சுமார் 90 சதவீதத்தினர் இஸ்லாமியர்கள் வாழும் ஊர் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வூரில் ஏதேனும் ஒரு விஷயம் பொதுமக்களிடம் உடனடியாக சென்றடைய வேண்டுமென்றால், இங்குள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் தகவல் அறிவிப்பார்கள். உதாரணமாக, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது, ரேஷன் கடைகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது, குழந்தை காணவில்லை, இறப்பு செய்தி... இப்படி அறிவிக்கப்படுகின்ற பல செய்திகள் அடுத்த நிமிடமே ஊரில் உள்ள அனைவருக்கும் சென்றடைந்து விடுவதில் மகிழ்ச்சிதான்.
ஊரில் சுன்னத் ஜமாத் சார்பில் ஐந்து பள்ளிவாசல்களும், தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரண்டு பள்ளிவாசல்களும் இருக்கின்றன. சுன்னத் ஜமாத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார் என்றால், அவர் இறந்த செய்தியை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் அறிவிக்கிறார்கள். தவ்ஹீத் பள்ளிவாசல்களில் அறிவிப்பதில்லை என்று சொல்வதைவிட, அறிவிக்கச் சொன்னால் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கப் போவதில்லை. ஆனால், தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து விட்டால், சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்வதில்லையே, ஏன்? என்ன காரணம்? தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த சிலரின் இந்த கேள்விக்கு சுன்னத் ஜமாத்தைச் சேர்ந்த பலரும் பதில் சொல்ல முடியவில்லை. இரு ஜமாதிற்கும் பல விஷயங்கள் அப்போதிலிருந்தே ஒத்துப்போவதில்லை, அதனால் இருக்கலாம் என்று பதில் சொன்னால்... ஒரே ஊர் என்பதற்காக இஸ்லாமியர் அல்லாத பிறருடைய இறப்பு செய்தியை சுன்னத் ஜமாத்தில் அறிவிக்கும்போது, தவ்ஹீத் சம்மந்தப்பட்ட மையத் செய்தியை அறிவிப்பதில் அப்படி என்ன பாவம் சேர்ந்து விடப்போகிறது?
அவர்கள் என்னமோ, தங்களிடம் மட்டும் குறை இல்லாதது போல் பேசுகிறார்கள். அவர்களிடம் உள்ள குறைகளை பிறர் எடுத்துக்கூறும் போதுதானே அவர்களுக்குத் தெரியும். அதே சமயம் அவர்களிடம் குறைகளை கூறும்போது, இஸ்லாத்திற்கு மாற்றாக நம்மிடம் குறைகள் இருக்கிறதா என்று சம்மந்தப்பட்ட மார்க்க அறிஞர்களிடம் கலந்தாலோசித்து மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். அதே போல் நம் ஜமாத்திலும் எவ்வளவோ ஊர் கட்டுப்பாடுகள் இருந்ததை காலப் போக்கில் நாம் மாற்றிக் கொண்டுள்ளோம். அவர்கள் கேட்பதுபோல் இஸ்லாமியர் அல்லாதவர்களின் இறப்பு செய்தியை நாம் ஏன் அறிவிப்பு செய்தோம் என்று நான் கேட்கவில்லை. இஸ்லாமியர் அல்லாத இன்னும் சிலருடைய இறப்பு செய்தியை நாம் அறிவிக்காதது ஏன்? மேலும், ஊர் மக்கள் அனைவருக்கும் தேவையில்லாத சில வெளியூர் இஸ்லாமியர் மையத் செய்தியை கூட அறிவிக்கிறோமே... உள்ளூரில் நமது சமூகத்தைச் சேர்ந்தவருடைய இறப்பு செய்தி அறிவிக்காதது முறையாகுமா?
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்துக் கொள்ள இடம் கொடுத்து நன்மையை தேடிக் கொள்கிறோம் என்பதைவிட, இறப்பு செய்தியை அறிவிக்க மாட்டோம் என்பதால்... ஜனாஜாவை பார்க்க முடியாமல், தொழுகையில் கலந்து கொள்ள முடியாமல் போகும் எத்தனை பேருடைய பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும்.
தற்போதைய சுன்னத் ஜமாஅத் நிர்வாகம், முந்தைய காலகட்டத்தில் இஸ்லாத்தைப் பற்றி முழுதும் அறிய முடியாத பல விசயங்களில் பிடிதளராமல் நிர்வகித்தவர்களைப் போல் இல்லாமல்... தற்போதைய பல நற்செயல்களுடன் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் தெரிந்ததுதான்.
தயவுசெய்து ஊர்நலன் கருதி இறப்பு அறிவிப்பு செய்தியில் மாற்றம் செய்வது சம்மந்தமாக நிர்வாகத்தில் உள்ளவர்கள் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.
நன்றி முகநூலிருந்து நமதூர் பார்வை
Nandri namathur parvi good ........
பதிலளிநீக்குNandri namathur parvi good ........
பதிலளிநீக்கு