லீக் வளர்ச்சிப்பாதையா? வீழ்ச்சிப்பாதையா?
அல்லாஹ்வின் மாபெரும்
உதவியால் நமதூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு MGM மகாலில் இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இஸ்லாமிய திருமண சட்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது.
அல்ஹம்து லில்லாஹ்….
இந்த கூட்டம் மழையின்
காரணமாக உள் அரங்கில் நிகழ்த்தப்பட்டது. இதில் அக்கட்சி MP உட்பட அனைத்து பொதுமக்களும்
திரலாக கலந்துக் கொண்டனர். கடந்த காலங்களில் லீக் செயல்பட்ட முறைகளையும் நடப்பு
காலங்களில்
என்ன செய்து கொண்டுஉள்ளது என்பதனை விளக்கமாகவும் தெளிவாகவும் பொதுமக்களுக்கு அறிஞர்
பெருமக்கள் விளக்கினார்கள்.
ஒரு காலகட்டத்தில்
மரியாதைக்குறிய காயிதே மில்லத் அவர்களால் வழி நடத்தப்பட்ட இந்த அமைப்பு இப்பொழுது எந்த
நிலையில் உள்ளது என்பதனை சற்று சிந்தித்து பார்க கடமை பட்டுள்ளோம். இவர்களின் வாரிசுகள்
சரிவர பின் தெடர்திருந்தால் இன்று ஓரு சில ABCD இயக்கங்களும் உருவாகி இருக்க காரணமில்லை.
இவர்களின் சுய நலங்களின் காரணமாக இன்று நம் இந்தியாவில் ஒரு சில இயக்கங்கள் தலையெடுக்க
வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியாவின் காங்கிரஸ்
கட்சிக்கு அச்சுருத்தலாகவும் எதிர்கட்சியாகவும் இந்த லீக் இருந்தது என்றால் அது மிகையல்ல.
தமிழகத்தில் சுமார் 16 தொகுதிகளை தம் கட்டுக்குள் வைத்திருந்தது. இன்று இக்கட்சி 1
சீட்டுக்கு பிச்சை எடுக்க கூடிய அவலநிலை! சில அயோக்கியர்களின் வழி நடத்தியமையால் (நடத்தி
கொண்டிருப்பமையால்) இது தன் முடிவை எதிர் நோக்கி கொண்டுள்ளது.
ஜாதி கட்சி காரர்கள்
கூட தங்களுடைய இடத்தை ரிசர்வு தெகுதியக பிரகடனபடுத்தியும் கூட இந்த அயோக்கியர்கள் மாணம்
இழந்து தங்களின் பொண்னாடை பெருமைக்கு ஆசைபட்டு மவுனம் சாதித்தார்கள். அன்றே இந்த அயோக்கியர்கள்
16 ரிசர்வு தொகுதியை முஸ்லிம் மக்களுக்கு வாங்கி தந்திருந்தால் இன்று நம் இனத்து மக்கள்
மற்ற சமுதாய மக்களிடம் உதவியை எதிர்பார்கக கூடிய அவசியம் இருந்திருக்காது. தன் சுயநலத்திற்காக
நம் இணத்தவர்களை அககு வைத்து பார்த்த இந்த மதிகெட்டவர்களின் மையத்தை கூட உங்கள் அருகில்
புதைக்க அனுமதிக்காதீர்கள். நாளைய நம் வாரிசுகள் இவர்களின் எழும்பை தோன்டி எறிக்கும்
என்பதில் எள்ளலவும் மாற்றமில்லை.
இவர்கள் இழந்த
16 தொகுதியை மீண்டும் பெற முயற்சி செய்வதாக கூட தெரியவில்லை. அனைத்து தொகுதியையும்
இழந்து இன்று 1 தொகுதிக்காக பிச்சையெடுத்து அதை பெற்றும் வருகின்றனர். அது மட்டும்
தான் இவர்கள் கையில் உள்ளது. நேற்று ஆரம்பித்த கட்சிகளுக்கு கூட 3 தொகுதி கொடுக்ககூடிய
இந்த திராவிட இயக்கங்கள், இந்த கட்சி முதுகொழும்பு இல்லாத நிலைக்கு தல்லியிருக்கின்றது.
இந்த லீக் அமைப்பு
நல்ல காரியங்களிளும் இறங்கி செயல் படுத்துகின்றதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால்
அங்கு நீங்கள் கூறியது போல அனைத்து பிரச்சனைகளிளும் இந்த அமைப்பு முன்னின்று செயல்
படுகிறது. என்ற பச்சை பொய்யை நடு நிலையாலர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்களைவிட
அதிக துடிப்புடனும் வீரியத்துடனும் இன்றய சூழ்நிலையில் ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள்
செயல் படுகின்றது என்பதை உங்கள் உதடுகள் மறுத்தாலும் உள்ளம் அதை உங்களுக்கு உருதிப்படுத்தும்.
நீங்கள் பெறக்குகூடிய
1 சீட்டை பார்த்துதான் இன்றய சூழ்நிலையில் மற்ற இஸ்லாமிய கட்சி உருவாக காரணமாக உள்ளது.
அன்றுநீங்கள் மேடையில் அவர்களை விமர்சனம் செய்து பேசினாலும் அவர்களுக்கு தண்ணீர் உற்றி
வளர்த்து விடுவது உங்களை அறியாமலே நீங்கள் தான் என்பதை புறிந்துக்கொள்ளுங்கள். ஒரு
காலகட்டத்தில் உங்களுடைய வேகமும் விவேகமும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றது என்பதை
யாராலும் மறுக்க முடியாத ஒன்று ஆனால் இன்று எந்த நிலையில் உள்ளோம் என்பதை சுயப்பரிசோதனை
செய்து பாருங்கள்.
நமதூரிலும் மற்ற
ஊர்களிலும் ஒரு சில நல்ல உள்ளங்கள் படைத்த மக்களை இவர்களின் கட்சியில் வைத்துக்கொண்டு
உங்களின் சுயநலங்களை தேடுவது உங்களின் சானக்கியதனம் என்பது உங்களுக்கே தெரியும்.
மிதிபட்ட பாம்பும்,
அடிபட்ட புலியும், வஞ்சிக்கப்பட்ட மக்களும், பழிதீர்காமல் இருந்ததில்லை…….
நமது நிருபர்.
Sariya sonneinga paa
பதிலளிநீக்குAppayavathu intha leeq karagaluku puththy varatoom.
Islamiya Therumanam saittam du solli kitchy valarka kutam pootainga ## Super news
Sariya sonneinga paa
பதிலளிநீக்குAppayavathu intha leeq karagaluku puththy varatoom.
Islamiya Therumanam saittam du solli kitchy valarka kutam pootainga ## Super news
பதிலளிநீக்குஇத்தனை வருசமா எங்கே போய்ருந்தீங்க முஸ்லிம் மக்களே அடகு வச்சவக நீங்க மருபுடியும் என்களே ஓட்டுவங்கிகளாக மாத்தபாக்கிரிங்கள முஸ்லிம் லீக் எங்க ஊருக்கு நீங்க என்னா செஞ்சுஇருக்கிங்க ..............?
ஹமீது