Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 5 செப்டம்பர், 2013

மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு!

இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி. எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது.
இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.


பிரிவுகளும் காலி இடங்களும்
யு.பி.எஸ்.சி. அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டெண்டன்ட் ஆர்க்கியாலஜி பிரிவில் 8 இடங்களும், லெக்சரர் பிரிவில் 1ம், சயிண்டிஸ்ட் பி பிரிவில் 21ம், ஆயுர்வேதா பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 5ம், யுனானி பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 3 என்ற அளவில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிக பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் வரலாறு, ஆர்க்கியாலஜி, சமஸ்கிருதம், பெர்சியன், பிரக்ரித், பாலி, அராபிக், ஆந்த்ரபாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வரலாறு, தொல்பொருள் தொடர்புடைய இரண்டு வருட ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
சயிண்டிஸ்ட் பி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாவரவியல் பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சித்தா மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆயுர்வேதப் பிரிவில் பட்டப் படிப்பும், யுனானி மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க இதே பிரிவில் பட்டப் படிப்பும் தேவைப்படும்.

இதர தகவல்கள்
யு.பி.எஸ்.சி.யின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்
விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.09.2013
இணையதள முகவரி: http://upsconline.nic.in/ora/candidate/VacancyNoticePub.php

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக