Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆதார்: உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு கிடைத்த அடி!

தலையங்கம்
கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான கே.எஸ். புட்டாசாமி உச்சநீதிமன்றத்தில் “மத்திய அரசின் ஆதார் அட்டை திட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்” என்று பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார்.
மேலும் பல்வேறு மாநில அரசுகள் சம்பளம் பெறுவதற்கும், ஓய்வூதியம் பெறுவதற்கும், திருமணம் பதிவு செய்யவும், நிலம் பதிவு செய்யவும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில் அரசு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றும் விருப்பமுடையவர்கள் மட்டும் ஆதார் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (திங்கள் கிழமை) தீர்ப்பளித்தது.
எந்தவொரு சட்டத்தின் பின்புலம் இல்லாத ஆதார் திட்டம், புற வாசல் வழியாக மக்கள் மீது திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பின்னடைவாக உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு அமைந்துள்ளது.
வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அளவுக்கு அரசு அமல்படுத்த முயன்ற ஆதாருக்கு எந்தவொரு சட்டத்தின் பின்புலமும் கிடையாது. ஆதார் திட்டத்திற்கு பின்புலமாக யு.ஐ.டி. மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும் என்ற அடிப்படையிலான பரிந்துரையை பாராளுமன்ற நிலைக்குழு வழங்கியது.
ஆனால், இதுவரை இம்மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்படவில்லை. அதேவேளையில் ஆதார் அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது பாராளுமன்றத்தின் இறையாண்மை மீதான அத்துமீறலாக கருதப்படுகிறது.
ஆதார் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். தனி நபர் சுதந்திரத்திற்கு கைவிலங்கிடும் இத்திட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவுக்கு எதிரானது என்று  அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு தடை போடும் சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை என்று அரசியல் சாசனத்தின் 13(2) பிரிவு கூறுகிறது. அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உறுதி செய்யும் அடிப்படை உரிமைகளில் தனி நபர் சுதந்திரம் பற்றி தனியாக கூறவில்லை.
எனினும் அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவில் தனி நபர் சுதந்திரமும் அடங்கும் என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்திருப்பதை சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற திட்டத்திற்கான முயற்சியை துவங்கிய போதிலும் மக்களின் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து அதனை கைவிட்டனர். இதிலிருந்து பாடம் படிக்காமல் மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் வகையில்  முன்னாள் இன்ஃபோஸிஸ் தலைவர் நந்தன் நீலகணி தலைமையில் இத்திட்டத்தை புறவாசல் வழியாக செயல்படுத்த துவங்கியது மத்திய அரசு.
இதுவரை இத்திட்டத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஊழல்கள் லட்சம் கோடிகளை தாண்டும்போது மக்களின் அந்தரங்கங்களில் தலையிடும் வீணான திட்டத்திற்கு 50 ஆயிரம் கோடி செலவழிப்பதை மத்தியில் ஆளும் ஐ.மு. அரசு அலட்சியமாக கருதியதோ என்னவோ?
ஆனால், ஊழலும், ஊதாரித்தனமும் ஏற்படுத்தும் சுமையால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தானே! இதில் அரசுக்கு என்ன கவலை?

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக