Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 11 செப்டம்பர், 2013

பாடம் படிக்க மறந்த (மறுத்த) தீன் இயக்க நிர்வாகிகள் ?

பாடம் படிக்க மறந்த (மறுத்த) தீன் இயக்க நிர்வாகிகள் ?
ஒன்பது குழுக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தார். நல்ல அறிவும், திறமையும் உள்ளவர்கள். ஆனால் உண்மை விசுவாசிகள் இல்லை. அவர்கள் நேருக்கு நேர் சிந்திப்பவர்கள் அல்லர். குறுக்கு புத்தி கொண்டவர்கள். சதித்திட்டம் தீட்டுபவர்கள். ஸமூத் கூட்டத்தாரை அவர்கள்தான் வழிநடத்திச் சென்றார்கள்.

ஸமூத் கூட்டத்தார் உடல் திடகாத்திரம் உடையவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுந்த பொருள் வளமும், உடல் பலமும் கொடுத்திருந்தான். பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகளுக்கும், கனி தரும் தோட்டங்களுக்கும் சொந்தக்காரர்களாக அவர்கள் இருந்தனர்.

மலைகளைக் குடைந்து அதியற்புதமான, அழகான வீடுகளை உருவாக்கி அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்க்கையில் என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவையத்தனையும் அவர்களுக்குக் கிடைத்தன.


ஆனால் இறையுணர்வற்றவர்களாக அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்க்கைத் தூய்மை இல்லை. ஆதலால் எப்பொழுதும் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அமைதியற்ற சூழலும், ஒரு விதமான பீதியும் அங்கே நிலவி வந்தன. பல குற்றங்கள் செய்து அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தூர விலகி நின்றார்கள். சமூகங்களில் குற்றம் புரிந்தோர் ஆலயங்களைக் கைப்பற்றி வைத்திருந்தனர்.

நன்மை என்னும் வாசனை கொஞ்சம் கூட இல்லாதிருந்த அந்தச் சமூகத்தில், அவர்களிலிருந்தே ஓர் இறைத்தூதரை அல்லாஹ் நியமித்தான். அவர்தான் நபி ஸாலிஹ்(அலை).

ஸாலிஹ் (அலை) அவர்களை அந்தச் சமூகத்தார் நிராகரித்தார்கள். அல்லாஹ்வின் கோபம் காரணமாக அவர்களுக்குப் பல சோதனைகள் வந்தன. அவைகளிலிருந்து பாடம் படித்து நேர்வழி பெறுவதற்குப் பதிலாக, நல்லவற்றை உபதேசித்த ஸாலிஹ் (அலை) அவர்களை விரோதியாகப் பார்த்தார்கள். நம் சமூகத்தின் எதிரி என்று பிரகடனப்படுத்தினார்கள்.

அந்தச் சமூகத்தாரின் தவறான தலைவர்களைக் குறித்து ஸாலிஹ் (அலை) அவர்கள் சாதாரண மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தார்கள்.அதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

மேலும், வரம்பு மீறுவோரின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள். அவர்கள் எத்த கையோரென்றால் பூமியில் குழப்பம் செய்வார்கள். இன்னும் சீர்திருத்தம் செய்யமாட்டார்கள் (என்றொல்லாம் ஸாலிஹ் நபி கூறினார்கள்)
சூரா அஷ்ஷூ அரா 26 :151 ,152

ஆனால் அந்த மக்களுக்கு அவர்களின் தலைவர்களைத் திருத்த முடியவில்லை. மாறாக, இறைத்தூதரை நிராகரித்தார்கள். அவரை கொலை செய்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார்கள்.

காலச் சக்கரம் சுழல்கிறது. அதே நிகழ்வுகள் திரும்புகின்றன. தவறான தலைவர்களிடம் சிக்கிக்கொண்ட மக்களின் காதுகளில் நன்மையின் பால் அழைக்கப்படும் அழைப்பொலிகள் கேட்பதில்லை. வெற்றிப் பாதையைக் காட்டுபவர்களை எதிரியாகக் காணும் சூழ்நிலை.

நல்லவைகள் போதிக்கப்படும்பொழுது சகுனம் சரியில்லை என்ற எண்ணம்!

இப்படித்தான் இன்று தீன் இயக்க நிர்வாகிகள் மீது துபாயில் உள்ள நமதூர் மக்கள் எழுப்பும் சந்தேகங்கள். கடந்த நோன்பு பெருநாளில் அன்று இரவு நமதூரில் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் மேற்கு ஜமாத் தலைவரும் செயலாளரும் சொன்ன கருத்து தான் இன்று பெறும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இதற்கு முன் தீன் இயக்க தலைவர் ஒரு சில கேள்விற்கு நிர்வாகிகள் பதில் அளித்தனர். ஆனால் நிர்வாகிகள் சொன்ன அந்த பதில் தான் தீன் இயக்க தலைவரையே அதிச்சிக்குள்ளாக்கிது எனலாம். 

அப்படி என்னதான் கூறினார்கள். அதாவது துபாயில் தீன் இயக்கத்தால் நடாத்திக் கொண்டிருக்கும் வட்டியில்லா கடன் திட்டத்திற்கும் அதில் உள்ள கொடுக்கல் வாங்கள் பணம் பிரச்சனைகள் அனைத்து தீன் இயக்கமே பொறுப்பு. இதற்கும் மேற்கு ஜமாத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றார்கள்.

இப்படி ஒரு பதில் ஜமாத்தில் இருந்து வந்தவுடன் தீன் இயக்க தலைவர் அங்கு வந்த தீன் இயக்க நிர்வாகிகளாக இருந்த நாட்டாண்மை ரியாஜ் மற்றும் ஓது லெப்பை ஷாஜஹான் ஆகியவர்களிடம் என்னபா ஜமாத் ஒப்புதல் லட்டர் அனுப்பி வைத்தார்களே அது என்ன என்று கேட்ட தீன் இயக்க தலைவரின் கேள்விற்கு அந்த இரண்டு பேரிடமும் பதில் இல்லை.

இதில் தான் நமது சந்தேகமும் ஏற்படுகிறது. ஏனெனில் ஜமாத் ஒப்புதல் அளித்துள்ளதாக தீன் இயக்கம் கொடுத்த லட்டரில் உள்ள வாசகம் உண்மையானதா ?


கீழே உள்ள லட்டரைதான் தீன் இயக்கம் துபாயில் ஜமாத் ஒப்புதல் அளித்ததாக வெளியிட்டுள்ள லட்டர் நீங்களே படித்து முடிவுக்கு வாங்க.......



இந்த லட்டரின் உண்மை தன்மையை தீன் இயக்கம் தான் விளக்க வேண்டும்.
நமது நிருபர்

2 கருத்துகள்:

  1. அவர்களுக்கு இது வட்டி என்ரே தெரியவில்லை. இதற்கு எல்லாம் அல்லா விதம் பதில் சொல்லியே ஆக வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. என்ன சொல்லுரீங்க. அப்ப தீன் இயக்கம் பொய் செல்லுதா?

    பதிலளிநீக்கு