Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 19 செப்டம்பர், 2013

பேருந்து பயணிகளின் நேரத்தைப் போற்றும் துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக நகரான துபாய், பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உலகிலேயே மிக நீளமான ஆளில்லா / தானியங்கி ரயில் சேவையை திறம்பட செய்து கட்டுக் கடங்காமல் இருந்த சாலைப் போக்குவரத்து பிரச்சினையை வெகுவாகக் குறைத்தது. இதனால் அலுவலகம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று வரும் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர்.

இது மட்டுமின்றி, நகரெங்கும் இருந்த பேருந்து நிறுத்தங்களை குளிர்சாதன வசதி கொண்ட வகையில் மாற்றியமைத்ததோடு அட்டவனையில் குறிப்பிட்டபடி பேருந்துகள் துல்லியமாக வந்து செல்லும்படி வசதியும் ஏற்படுத்தியது.
இதனால் பயண நேரத்தைக் கணக்கிட்டு பயணிகள் வெகுவாகப் பயனடைந்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்து நிறுத்தங்களில் செய்மதி தொடர்புடன் கூடிய நேரம் காட்டிகளைப் பொருத்தி பேருந்துகள் வரும் நேரங்களை துல்லியமாக வெளியிட்டுள்ளது. அடுத்த பேருந்து இன்னும் எத்தனை நிமிடத்தில் குறிப்பிட்ட நிறுத்தை வந்தடையும் என்பதை GPS தொழில் நுட்ப உதவியுடன் தெரிவிக்கிறது.

இதன் மூலம் பேருந்து வரும் நேரத்தை அறிந்து பயணிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், தாமதமாகும் எனில் டாக்ஸியிலோ அல்லது வேறு மார்க்கமாகவோ பயணத்தைத் திட்டமிட வசதியாக உள்ளது. துபாய் மாநகராட்சியின் துணை நிறுவனமான RTA வின் இந்த மேம்படுத்தப்பட்ட சேவை அரபு நாடுகளிலேயே முன்னோடியானது என்றால் மிகையில்லை. சபாஷ் துபாய்.
நன்றி இன்நேரம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக