செவ்வாய், 30 ஜூன், 2015
சனி, 27 ஜூன், 2015
யார் மீட்டெடுப்பார்கள்? காயிதே மில்லத் கட்டிய அரசியல் சாம்ராஜ்யத்தை – நெல்லை ஆதில்
தாமிரபரணியின் தாயகமான நெல்லை மாவட்ட்த்தின் பேட்டை நகரமே வாழ்க்கையின் இருள் சூழ காட்சியளித்த நேரம்(இன்றும் அப்படித்தான் காட்சி அளிக்கிறது) 1896ம் ஆண்டு ஜூன் திங்கள் 5ஆம் நாள் கடலைப்பிளந்து கொண்டு சூரியன் இந்த உலகுக்கு வெளிச்சம் அளிப்பதைப்போல இருளைப்பிளந்து கொண்டு இந்த சமூகத்தின் விடியல் பிறந்த நாள். ஆம் கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்கள் பிறந்தார்கள்.காயிதே மில்லத் என்றால் மக்களின் வழிகாட்டி என்று பொருள் அதற்கேற்ப மக்களின் வழிகாட்டியாக திகழ்ந்தார் இஸ்மாயில் சாகிப் அவர்கள்.
புதன், 24 ஜூன், 2015
ஞாயிறு, 21 ஜூன், 2015
ஓ…மானிடனே,என்னை தெரிகிறதா?
இறை மாதங்கள் 11க்கு பின்னர் உன்னை காண வந்திருக்கும் ரமலான் நான் தான்.
கடந்த மாதங்களில் நீ யாரையெல்லாம் நேசித்தாயோ?அது எனக்கு தெரியாது?
ஆனால் இம்மாதம் முழுவதும் என்னை நீ நேசித்தால்..நான் உன் மண்ணறையிலிருந்து மறுமை வரை உன்னை விட்டும் பிரியாமல் உன் நலன் பேண உன்னையும்,என்னையும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்றாடுவேன்.
பொறாமைப்படுபவர்கள் இறை அருளுக்கு எதிரானவர்கள் ...
பொறாமை என்பது பெரும்பாவங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு விதமான "மனநோய்". சக மனிதருக்கு கிடைத்திடும் வசதி வாய்ப்புகள், திறமை, பணம், அந்தஸ்து, பாராட்டுகள் ஆகியவற்றைக் காணும் போது, அவர் மீது பொறாமைப்பட்டு அவைகளை இல்லாமல் ஆக்குவதற்கு அந்த மனிதனைப் பற்றி கேவலமாகவும், இழிவாகவும் பேசி அவற்றை பறிப்பதற்குண்டான செயல்களில் ஈடுபடக்கூடிய மனோ நிலை மனிதனிடத்தில் இன்று மிக அதிகமாக காணப்படுகிறது. தன்னை விட அடுத்தவன் சிறப்புகளை, உயர்வுகளை அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆரோக்கியமான பெற்றோர்கள் எங்கே?
சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இரண்டு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சங்கர் பாண்டி (15), சஞ்சய் கண்ணன் (15) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆண்டு 9ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலாகி விட்டனர். அதன்பிறகு ஃபெயிலான இரண்டு பாடங்களையும் தற்பொழுது எழுதி இருந்தனர். அதற்கிடையில் இரண்டு சிறுவர்களும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து உள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.
வெள்ளி, 19 ஜூன், 2015
புதன், 17 ஜூன், 2015
ரமளான் நல்வாழ்த்துகள்!
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 18, 2015 (வியாழன்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோன்பின் மாண்பு
அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்பு மிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தக் கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும் கூட களைந்து உண்மையான/முழுமையான முஸ்லிம்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
செவ்வாய், 16 ஜூன், 2015
திங்கள், 15 ஜூன், 2015
துபை : ஓட்டுநர் உரிமத் தேர்வில் தமிழ் உட்பட 4 இந்திய மொழிகள் சேர்ப்பு!
துபை: துபாயில் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (ஆர்டிஏ) நடத்தி வருகிறது.
பிரார்த்தனையின் பலம்! – MSAH
டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.
அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார்
அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார்
“பெரும் பயணம்!” – சாளை பஷீர் ஆரிஃப்
பயணம் வழியாக வாழ்க்கையை அறிதல்; வாழ்க்கையையே ஒரு பயணமாக உணர்தல் என ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத கண்ணியின் தொடர் சுழற்சியை நிதானித்து கவனித்தால் ஒன்று புரியும். பயணம் என்கின்ற பெரிய சுழல் வளையம் சுருங்கி சுருங்கி இறுதியில் மறுமைப் பெருவெளியில் மூலப் புள்ளியில் போய் ஒடுங்கும் வரை முடிவடைவதே இல்லை என்ற பேருண்மை விளங்க வரும்.
உண்மையான உள்ளங்கள் எங்கே?
தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து, கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.
மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.
சனி, 13 ஜூன், 2015
வெள்ளி, 12 ஜூன், 2015
பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன ? அதை எவ்வாறு சரி செய்யலாம் ?
அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள். முகத்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒருவரது உடலானது அவரது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையைக் கொண்டிராமல், மிக அதிக எடையுடன் காணப்பட்டால், அவருடைய முக அழகு யாராலும் பாராட்டப்படுவதில்லை. எனவே ஒரு முழுமையான அழகு என்பது
திராவிட கொள்கைகளில் இருந்து திமுக விலகினால் கூட்டணியைவிட்டு வெளியேறுவோம்: முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் உறுதி
திராவிட கொள்கைகளிலிருந்து திமுக விலகினால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன் கூறினார்.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
இன்றைய அரசியல் சூழல் எப்படி உள்ளது, மோடியின் ஓராண்டு ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியா மதச்சார்பற்ற நாடென்பது 5 ஆயிரம் வருடத்து இயற்கை நீதி.
வியாழன், 11 ஜூன், 2015
மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுப்புவோம்! – வி. களத்தூர் ஃபாரூக்
மரண தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களும், விவாதங்களும் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது உலகில் 140 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நாடுகள் ரத்து செய்யாவிட்டாலும் மரண தண்டனையை நிறைவேற்ற யோசிக்கும் அளவில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த இரண்டு வழிகளிலும் இல்லை. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில்தான் அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது.
சர்ச்சையாக்கப்படும் இந்திய ரூபாய்!
பண்டைய கால இந்தியாவில் ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் அதற்கு பதிலாக நாம் ஒரு பொருளை கொடுத்து அந்த பொருளை வாங்க வேண்டும். இந்த முறையின் பெயர் பண்டமாற்று முறை. இதை பல்வேறு மன்னர்களும் அரசர்களும் அமுல்படுத்தி வந்தனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு இந்த முறை முற்றிலும் அழிக்கப்பட்டு பணத்தை கொடுத்து வாங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த முறையே அமுல்படுத்தபட்டு வருகிறது.
இந்தியா பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்:பாகிஸ்தான் !
மணிப்பூரில் இந்தியா ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். மியான்மர் எல்லையில் பதுங்கி இருப்பதை அறிந்த இந்திய ராணுவம், மியான்மர் எல்லைக்குள் புகுந்து முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 100 கொல்லப்பட்டனர்.
மியான்மரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன்
புதன், 10 ஜூன், 2015
இரண்டே நாட்களில் பிரபல எழுத்தாளர் ஆவது எப்படி? – ஆரூர் யூசுஃப்தீன்
நீங்கள் ஒரு இன்ஜினியராக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம். ஏன், பள்ளி மாணவராக கூட இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் தற்பொழுது லேட்டஸ்ட் டிரெண்டு எழுத்தாளர் ஆகலாம்.
உடனே ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்குங்க. நான் சொல்லும் எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளையும், அறிவுரைகளையும் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். இதனை செய்தால் போதும். நாளையில் இருந்து நீங்களும் “பிரபல எழுத்தாளர்” என்று அனைவராலும் அழைக்கப்படுவீர்கள்.
எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளில் முக்கியமானது உடனடியாக முகநூலில் ஒரு கணக்கு தொடங்க வேண்டும்.
செவ்வாய், 9 ஜூன், 2015
உண்மையான உள்ளங்கள் எங்கே?
தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து, கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.
மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.
தாடி வைத்தற்க்காக தீவிரவாதி என்று கூறி வேலையை விட்டு நீக்கிய: அதுனிக் குழுமம் !
கொல்கத்தா: தாடி வைத்தற்க்காக தீவிரவாதி என்று கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர். இஸ்லாமியர் என்பதால் வேலையை இழந்து தவிக்கிறார்.. கொல்கத்தாவில் அதுனிக் குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தில் சுரங்க பிரிவு மேலாளராக ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் முகமது இஸ்மாயில். கடந்த ஆண்டு இவர் ஹஜ் புனித யாத்திரை முடித்துவிட்டு மே மாதம் தாடுயுடன் திரும்பியுள்ளார், இதற்க்குப் பிறகுத் தான் அலுவலகத்து அயோக்கியர்கள் தங்களது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஞாயிறு, 7 ஜூன், 2015
ரமலான்- பேரித்தைகளும், பேராயுதங்களும் ..!!!
உலக மாந்தர்க்கெலாம் உன்னத மாதமாய் உடலும் உள்ளமும் தூய்மை பெற நம்மை நோக்கி ரமலான் வருவதற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ நடந்தேறிவிட்டன. முழு நிலவோ ரமலானை எதிர்பார்த்து தேய்ந்து கொண்டிருக்கிறது .
ஆயிரம் மாதங்களின் அந்தஸ்த்தை அள்ளித் தரும் இம்மாதத்திற்காய் உளப்பூர்வமாய் ஏங்கி நிற்பதும் , எப்படியேனும் இந்த ரமலானில் பாவங்களுக்கு பரிகாரம் தேடியே தீர வேண்டும் என்ற கங்கணம் கட்டிய மனதோடும் , ஏதோ ரமலானாமே என்ற அறியாமை இருளில் நோன்புக் கஞ்சிகளை சுவைக்கத் துவங்குவதுமான மனித மனங்களும் ஏறத்தாழ எதிர்பார்த்து இருக்கின்றன . ரமலானை அணுகுவதின் வடிவங்கள்தான் எத்தனை வகை..????
சனி, 6 ஜூன், 2015
புதன், 3 ஜூன், 2015
செவ்வாய், 2 ஜூன், 2015
நீதிபதி குன்ஹாவுக்கு பதவி உயர்வு !
கர்நாடக: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற பொது பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக பொறுப்பேற்ற 11 மாதங்களில் தீர்ப்பு தேதியை அறிவித்தார். இறுதிவாதத்தை வேகமாக முடித்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். ஜெயலலிதாவுக்கு ரூ.100.1 கோடியும், சசிகலா,சுதாகரன், இளவரசிக்கு ரூ. 10.1 கோடியும் அபராதம் விதித்தார். மேலும் ஜெயலலிதா தரப்புக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
திங்கள், 1 ஜூன், 2015
ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனஅழிப்பை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை மியான்மார் சந்திக்க நேரிடும் !
ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனஅழிப்பை மியான்மர் அரசு தடுத்து நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் 17 நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களின் பரிதாப நிலை உலகின் கவனத்தை இறையருளால் ஈர்த்திருக்கிறது இதன் எதிரொலியாக நேற்றைய தினம் 17 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட உச்சி மாநாடு ஒன்று தாய்லாந்தில் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)