Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 ஜூன், 2015

சர்ச்சையாக்கப்படும் இந்திய ரூபாய்!

பண்டைய கால இந்தியாவில் ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் அதற்கு பதிலாக நாம் ஒரு பொருளை கொடுத்து அந்த பொருளை வாங்க வேண்டும். இந்த முறையின் பெயர் பண்டமாற்று முறை. இதை பல்வேறு மன்னர்களும் அரசர்களும் அமுல்படுத்தி வந்தனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு இந்த முறை முற்றிலும் அழிக்கப்பட்டு பணத்தை கொடுத்து வாங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த முறையே அமுல்படுத்தபட்டு வருகிறது.

இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கபடுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. ரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான ரூப்யா என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. வடமொழியில் ரூப்யா என்பதற்கு வெள்ளி (பணம்) என்பது பொருள். நமது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ரூபாயின் மதிப்பு உலகரங்கில் அதிகம். நாளடைவில் உலகமயமாக்கம் என்ற அடிமைத்தளையின் காரணமாக அதன் மதிப்பு அதலபாதாளத்தில் இறங்க ஆரம்பித்தது.
இதுவரை நமது ரூபாயில் பல குளறுபடி குழப்பம் மற்றும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1950 காலகட்டத்தில் ஒரு ரூபாயின் தாளில் Government of India என்று அச்சிடப்பட்டது. இந்தியா ஆங்கிலோரின் ஆட்சிக்கு கீழ் இருந்து விடுதலை பெற்றதனால் இதை Republic of India என்று அச்சிட வேண்டும் என்று எதிர்ப்பு குரல் எழுந்தது.
ரூபாய் தாளில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியே அதிகமாக இருந்தனாலும் பல எதிர்ப்புகள் கிளம்பின. பின் ரூபாய் தாளில் இந்திய அரசின் ஆட்சி மொழிகளால் ரூபாயின் மதிப்பு குறிப்பிடப்பட்டது. அதேபோல் 1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களையும் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம் பெற்றன.
1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன. 1996 ஆம் ஆண்டு முதல் இந்திய ரூபாய் தாளில் அசோகா ஸ்தூபி அகற்றப்பட்டு மகாத்மா காந்தியின் புகைப்படம் அச்சிடப்பட்டது. இதற்கு பல காரணக்கள் கூறப்பட்டன. அதில் பலரால் ஒப்புக்கொள்ளப்பட்ட காரணம் அசோக மன்னர் பார்ப்பன மன்னர்களின் ஆதிக்கதிற்கும் அடக்குமுறைக்கும் எதிராக போராடியவர். ஆதலால் பா.ஜ.க. இதனை செய்தது என்று. மற்றொரு கருத்து காந்தியை கொலை செய்தவர்கள் காந்தியின் புகைப்படத்தை ரூபாய் தாளில் அச்சிடுவதினால் காந்தி மீது இவர்களுக்கு அதிகம் மரியாதை இருக்கிறது என்று காட்டுவதற்கான செயல்திட்டம் என்றும் கூறப்பட்டது.
தற்பொழுது 2014 இல் பா.ஜ.க. ஒட்டுமொத்த இந்திய மக்களின் 33% ஆதரவு பெற்று அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் மதத் துவேஷ பேச்சுகளும், அந்நிய நாட்டவரிடம் இந்தியாவை அடகு வைக்கும் – மன்னிக்கவும் – விற்கும் திட்டங்களும், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களும் மட்டும்தான் நிறைந்துள்ளது.
இதற்கிடையே வரலாறு திணிப்பு அரசு மற்றும் தனியார் துறைகள் காவிமயமாக்கம் போன்ற சதிச் செயல்களும் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே பல சர்ச்சைகளை கண்ட இந்திய ரூபாய் தாள் மிகப் பெரிய சர்ச்சையை சந்தித்தது. இந்திய ரூபாய் தாளை வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் காந்தியின் புகைப்படத்தை அகற்றி புதிய ரூபாய் தாளை வெளியிட்டது. இதனை பார்த்த இந்தியர்கள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். பல எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்திய ரிசர்வ் வங்கி அந்தப் புதிய வடிவத்தை இணையத்திலிருந்து அகற்றியது.
இதனை பார்க்கும்போது இந்த ஃபாசிச கும்பல் காந்தியின் கொலையை நியாயப்படுத்தி, இந்திய ரூபாயில் முதலில் காந்தியின் புகைப்படத்தை அகற்றி பின் கோட்சேவை சுதந்திர போராட்ட தியாகியாக்கி கோட்சேவின் புகைப்படத்தையும் பல ஃபாஸிச சித்தாந்தமுடையவர்களின் புகைப்படத்தையும் அச்சிட திட்டமிட்டுள்ளர்களோ என்று மனதில் சந்தேகம் வருகிறது.
ஆரூர் யூசுஃப்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக