Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 10 ஜூன், 2015

தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்?

தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்? 

சாலை விபத்தில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், விஷ ஜந்துக்கள் தீண்டி இறந்தவர்கள், கடல், குளம், ஆறு, கிணறு போன்ற நீர் நிலைகளில் மூழ்கி இறந்தவர்கள், விலங்குகள், மின்னல், இடி, மின்சாரம், விஷ வாயு தாக்கி இறந்தவர்கள், வெளிநாடுகளில் இறந்தவர்கள், மண் சரிந்து விழுந்து இறந்தவர்கள், அரசுப் பணியாளர்கள் இயற்கையாக இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்கள் என்று பல்வேறு வழிகளில் இறப்பெய்திய அத்துணை நபர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சங்கள் வரை உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன (மேற்கண்ட அனைத்தும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிகளை பெற்றவர்கள் (http://cmcell.tn.gov.in/readcmprf.php) என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சில தகவல்கள்).

"திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் 5 பேர் பலி; அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்டு, ஆறுதல் கூறி, தேவையான சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களை கேட்டுக் கொண்டார். விபத்தில் பலியானவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2,500 வழங்கி, அரசு உதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.  இந்த செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அந்த குடும்பங்களுக்கு தலா 3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளவதாகவும் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்".  

சமீபத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் கூட அரசும், முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்ய வேண்டிய கடமைகளை செய்துள்ளனர். அதற்காக பாராட்டுகின்றோம்.

ஆனால்," திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் 9 பேர் சாவு; அமைச்சர் நத்தம் விசுவநாதன் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்" என்ற செய்திக்கு பிறகு வேறு எந்த தகவலும் இல்லை. விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு இரங்கல் செய்தியோ, நிவாரண உதவியோ இதுவரை வரவில்லை. 

தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்? இறந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பதுதான் காரணமா? அல்லது அரசு அதிகாரிகள் முறையாக செயல்பட வில்லையா?

பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுவரை பதில் இல்லை. தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பதில் வருகிறது (எண்: 2015/823846/HP -  21/4/15, பதில் வந்த தேதி: 29/4/15). 

இது குறித்து திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் அளித்துள்ள பதில்: "மனு தொடா்பாக செம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் கோரப்பட்டதின் பேரில் விபத்தில் இறந்தவா்களுடைய வாரிசுதாரா்கள் முதலமைச்சா் விபத்து நிவாரண நிதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இறந்தவா்களுடைய இறப்புச் சான்றினை பதிவு செய்து, வாரிசு சான்று மற்றும் ஆட்சேபணையின்மை சான்றினை செம்பட்டி காவல்நிலையத்தில் சமா்ப்பிக்கும் பட்சத்தில் மேற்படி விண்ணப்பம் காவல்துணைக் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டு அதன்பிறகு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் இறப்புச் சான்று, வாரிசு சான்றினை செம்பட்டி காவல்நிலையத்தில் விரைந்து அளிக்க வேண்டும் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது" 

மேற்கண்ட பட்டியலின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இதுபோன்று எநதவொரு (அதவாது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறையிடு செய்து, மனு கொடுத்து, அதிகாரிகள் ஆய்வு நடத்திய பிறகு உதவி செய்வது) நிபந்தனையும் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை. 

இதற்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து முறையான பதிலும், உரிய நிவாரண உதவிகளும் கிடைக்குமா? 

இது குறித்து முஸ்லிம் சமுதாய கட்சிகளும், அமைப்புகளும், இயங்கங்களும், சிறுபான்மை மக்களுக்கு சேர்ந்தே பாடுபடுகின்றோம் என்று கூறும் பிற கட்சிகளும், அக்கட்சிகளும் அங்கம் வகிக்கும் மனிதாபிமான மனிதர்களும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 

குவைத்திலிருந்து... 
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக