Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 10 ஜூன், 2015

இரண்டே நாட்களில் பிரபல எழுத்தாளர் ஆவது எப்படி? – ஆரூர் யூசுஃப்தீன்

நீங்கள் ஒரு இன்ஜினியராக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம். ஏன், பள்ளி மாணவராக கூட இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் தற்பொழுது லேட்டஸ்ட் டிரெண்டு எழுத்தாளர் ஆகலாம்.
உடனே ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்குங்க. நான் சொல்லும் எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளையும், அறிவுரைகளையும் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். இதனை செய்தால் போதும். நாளையில் இருந்து நீங்களும் “பிரபல எழுத்தாளர்” என்று அனைவராலும் அழைக்கப்படுவீர்கள்.
எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளில் முக்கியமானது உடனடியாக முகநூலில் ஒரு கணக்கு தொடங்க வேண்டும்.
அதில் உங்கள் பெயருக்கு முன் எழுத்தாளர் அல்லது ஏதேனும் ஒரு அடைமொழியை வையுங்கள். அப்பொழுதுதான் பிறர் நம்மை எழுத்தாளன் என்று நம்புவார்கள்.
முகநூலில் உள்ள பிரபலங்களுடன் நட்பு வட்டத்திற்குள் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். எல்லா பதிவுகளுக்கும் செய்திகளுக்கும் மற்றும் கட்டுரைக்கும் கருத்து சொல்ல வேண்டும். முக்கியமாக எல்லோரும் சொல்லும் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு ‘ஐ.எஸ்.ஐ.எஸ். மோசமான அமைப்பு’ என்று அனைவரும் கூறினால் நீங்கள் அந்த அமைப்பு நல்ல அமைப்பு என்று சொல்லவேண்டும்.
இதுவரை சொன்னது ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்காண அறிவுரைகள். இனிதான் பிரபல எழுத்தாளருக்கான அறிவுரைகள் வருகிறது. எப்படியும் இலக்கியவாதிகளுக்கென ஏகப்பட்ட குழுமம் இருக்கும். ஏதாவது ஒரு குழுமத்தில் ஐக்கியமாகித் தளபதி ஆகிவிடுங்கள். அப்புறம் ‘தல’யே உங்களைப் பத்தி பாராட்டியோ, திட்டியோ எழுதிப் பிரபலம் ஆக்கிடுவார்.
புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே நீங்க வெளியிடப் போகிற புத்தகத்துக்கான விளம்பரத்தை முகநூலில் தொடங்கிவிடவேண்டும். “ஊடகம் முஸ்லிம்களுக்கு கானல் நீராகவும், மற்ற சமூகத்தினருக்கு காணும் நீராகவும் இருக்கிறது.” (“ஊடகவியலாளர் ஆவது எப்படி?’’ நாவலில் இருந்து…) – இப்படி நாள் ஒன்றுக்கு 18 பதிவுகளாக முகநூலில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
கடைசியாக புத்தக வெளியீட்டு விழாவில் வாசகிகளின் சார்பாக ஒருவர் மட்டும் பேசுவார் என்று அறிவிப்பு வெளியிட்டு, நிறைய வாசகிகள் விழாவிற்கு வருவார்கள் என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அப்புறம் என்ன, வெளியீட்டு விழாவுக்குக் கூட்டம் நிரம்பும். விழா அன்று வாசகிகள் வருவார்கள் என்று எண்ணி வாசகர்கள் அதிகம் வருவார்கள். அப்புறம் என்ன நீங்கதான் அடுத்த நவீன இலக்கியவாதி.
என்ன மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்ற தொடங்கியாச்சு போல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக