Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 ஜூன், 2015

இந்தியா பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்:பாகிஸ்தான் !

மணிப்பூரில் இந்தியா ராணுவத்தினர் மீது  நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். மியான்மர் எல்லையில் பதுங்கி இருப்பதை அறிந்த இந்திய ராணுவம், மியான்மர் எல்லைக்குள் புகுந்து  முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 100  கொல்லப்பட்டனர்.
மியான்மரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன்
சிங் ரத்தோர் கூறுகையில், மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே மியான்மரில் முகாம் மீது இந்தியாவின் தாக்குதல். இது மற்ற நாடுகளுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கை என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் நிசார் அலி கான் கூறியதாவது :
மியான்மரில் நடந்ததைப் போல பாகிஸ்தானிலும் நடத்தலாம் என இந்தியா பகல் கனவு காணக் கூடாது. இது பாகிஸ்தான். மியான்மர் அல்ல. பாகிஸ்தானை இந்தியா மியான்மர் என்று நினைத்து விடக் கூடாது. எல்லை தாண்டி எந்தப் படை வந்தாலும் பாகிஸ்தான் படைகள் தக்க பதிலடி கொடுக்கும். எனவே இதுதொடர்பாக இந்தியாவும், இந்தியர்களும் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பை பரப்புவோர் தங்களது கண்களையும், காதுகளையும் நன்றாக திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் எத்தகைய சூழல்நிலைக்கும் தயாராகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்காது என்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக