Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 ஜூன், 2015

முட்டையை சத்துணவில் சேர்க்க தடை:மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் !


போபால்: அசைவமான முட்டையை குழந்தைகளுக்கான சத்துணவில் சேர்க்கக் கூடாது என்று சைவப் பிரியரான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தடை விதித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில்
அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அலிராஜ்பூர், மண்ட்லா, ஹோசன்காபாத் மாவட்டங்களில் சோதனை முறையில் முட்டையை சேர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் மதிய உணவில் முட்டையை சேர்க்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். முட்டையில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் இருப்பதால் வாரம் இருமுறை முட்டையை சேர்க்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய் வராது என்றும் அதில் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானோ சைவப்பிரியர் என்பதால் அவர் முட்டை ‘அசைவம்’ என்று கூறி அதிகாரிகளின் யோசனையை ஏற்க மறுத்து விட்டார். முட்டைக்குப் பதிலாக கர்ப்பிணிகளுக்கும், மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துமிக்க பால் வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக