Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 31 அக்டோபர், 2015

ஊத்திக்கொடுத்த உத்தமி பாடல் எழுதியவர் கைது – வலுக்கும் கண்டனங்கள்!.

சென்னை: மது ஒழிப்பிற்காக “டாஸ்மாக்கை மூடு” மற்றும் “ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு” என்ற பாடலை இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.

“மூடு டாஸ்மாக்கை..!” என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவரும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான ‘மக்கள் அதிகாரம்’  அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் துபாயில் வசிப்பவரா? உங்களை மகிழ்ச்சி படுத்த காவல்துறை உதவும்!.

துபாயில் வசிப்பவர்கள் சோகமாக இருந்தால், உடனடியாக ஓடோடி வந்து காரணத்தைக் கேட்கிறது போலீஸ். உலகின் மிக மகிழ்ச்சி யான நகரம் என்ற பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிப்பதற்காகவே இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.
ஓர் எளிமையான ஆய்வு மூலம் மக்கள் சோகமாக இருக்கிறார்களா மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் முகச்சுளிப்புடன் இருக்கும் குறியீடு, சிரிக்கும் குறியீடு, உணர்ச்சிகளைக் காட்டாத முகபாவ குறியீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

புதன், 28 அக்டோபர், 2015

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்...

தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்
தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தமிழ்வழி பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு

அரசு வேலை வாய்ப்பு சுற்றறிக்கை ...

SDPI கட்சியின் சார்பாக நடைபெற்ற அரசியல் பயிலரங்கம்.

பெரம்பலூரில் அரசியல் பயிலரங்கம்.

மறைந்த இந்திய ஹஜ் தன்னார்வலர் பெயரில் விருது - சவூதி இந்திய தூதரகம் அறிவிப்பு!

ஹஜ்ஜின்போது உயிரிழந்த ஹஜ் தன்னார்வலர் பெயரில் வரும் ஆண்டுகளில் விருதுகள் வழங்கப்படும் என்று சவூதி இந்திய தூதரக துணைத் தூதுவர் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஹஜ்ஜின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்காணோர் படுகாயமடைந்தனர்.

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்!

அன்புடையீர்,இந்த மடல் உங்களின் சீரிய சிந்தனைக்கும்,நேரிய வழி பெறுவதற்கும் உதவட்டுமாக.

எனது இந்த மடல் ஊடக வாயிலாகவும் முகநூல் பரிமாற்றங்களின் வாயிலாகவும் உங்கள் பார்வையை வந்தடையும் என்ற நம்பிக்கையில் சில கேள்விகளை? உங்களிடம் முன் வைக்கிறேன்.

மௌனம் கலைத்தது சாகித்ய அகாடமி குழுமம்!.

சகிப்புத்தன்மைக்கு எதிரான போக்கு நாட்டில் அதிகரித்து வருவதை கண்டித்து எழுத்தாளர்கள் திருப்பிக்கொடுத்த சாகித்ய அகாடமி விருதுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அகாடமி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு

வெள்ளி, 23 அக்டோபர், 2015

“பால்தாக்கரேவின் காலில் விழுந்து கிடந்தவர் மோடி” உச்சமடையும் சிவசேனா – பிஜேபி மோதல்!.

மத்திய அரசிலும் மகாராஷ்டிர அரசிலும் அங்கம் வகிக்கும் சிவசேனா, பாஜக இடையிலான மோதல் முற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் யுத்தத்தை தொடங்கி உள்ளது சிவசேனா.
தாதர் பகுதியில் உள்ள சேனா பவனில், கட்சியின் கிழக்கு மும்பை பிரிவு சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதில் சிவசேனா கட்சியின் நிறுவனர் மறைந்த பால் தாக்கரே முன்பு மோடி தலைவணங்கி நிற்பது போன்ற புகைப்படம் உள்ளது.

மாட்டிறைச்சி உண்பதை பாஜக எதிர்க்காது என அக்கட்சியின் கேரள மாநில தலைவர் அறிவிப்பு

திருவனந்தபுரம்,: ”மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக, கேரளாவில் போராட்டம் நடத்தும் திட்டம் எதுவுமில்லை,” என, அம்மாநில பா.ஜ., தலைவர்
முரளீதரன் கூறினார்.
கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கக் கோரி, நாட்டின் பல பகுதிகளில் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ‘கேரளாவிலும், இதுபோல் போராட்டம்

புதன், 21 அக்டோபர், 2015

நமதூரில் ஏற்பட்ட மின் கம்பம் விபத்தில் பணியில் பின்னடைவு, இதனால் மின்சாரம் இன்றும் வருவது சந்தேகம் ..


நமதூர் 9 வது வார்டு கிழக்கு தெற்கு தெரு (பெண்ணக்கோணம் சந்து அருகில்) வில் நேற்று இரவு கிட்டதட்ட 11 மணி அளவில் அடையாளம் தெரியாத லாரி

இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக்கொலை – ஹரியாணாவில் பதற்றம்

ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் தலித் குடும்பத்தினர் மீது உயர் வகுப்பினர் கும்பல் தீ வைத்த சம்பவத்தில் 2 குழந்தைகள் பலியாகினர்; இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பல்லப்கர் போலீஸ் உதவி ஆணையர் புபீந்தர் சிங் கூறும்போது, “பரிதாப்பாத்தில் உள்ளது சம்பெட் கிராமம். இங்கு வசிக்கும் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்தே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிகாலை 3 மணியளவில், வீட்டினுள் 4 பேர் தூங்கிக்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டம்.

மத்திய பாஜக ஆட்சியின் மதசார்பின்மைக்கு எதிரான செயல்பாடுகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்சென்று விழிப்புணர்வூட்டும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ‘மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று (18.10.2015) சென்னை மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் பெருந்திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர், இ.எம்.ரசூல் தலைமையில் நடைபெற்ற

இட ஒதுக்கீடு சர்ச்சை : ஆர்.எஸ்.எஸ். – பாஜக இடையே முரண்பாடு

“இடஒதுக்கீட்டு முறையை மறுபரீசீலனை செய்ய வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சில வாரங் களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அமித்ஷா மிகவும் கோபமாக “பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பதை கேட்பதற்கு முன்னர் ஊடகங்கள் பாஜக மீது கொண்டுள்ள நிலைப்பாடு என்ன என்று தெரிவிக்க வேண்டும்” என்றார். பிஹார் தேர்தல், நிதிஷ் ஆட்சி தொடர்பான கேள்விகளை கேட்குமாறு அறிவுறுத்தினார்.

நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறதோ? - ஜனாதிபதி ஐயம்!

கொல்கத்தா: நாட்டில் சகிப்புத் தன்மையும், விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அழிந்து வருகிறதோ என்று ஐயம் எழுப்பியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
சமீப காலங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள், உதாரணமாக, பாகிஸ்தானி கஜல் பாடகர் குலாம் அலியின்

இந்திய வர்த்தகத்தில் ஈடுபட பலகோடி லஞ்சம் அளித்த வால்மார்ட்!

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான ‘வால்மார்ட் ஸ்டோர்ஸ்’ 2007–ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்தது.
ஆரம்பத்தில் பார்தி நிறுவனத்துடன் கூட்டாக சூப்பர் மார்க்கெட் வணிகத்தில் ஈடுபட்ட வால்மார்ட் 2013–ம் ஆண்டு முதல் தனியாக மொத்த விற்பனை வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

சனி, 17 அக்டோபர், 2015

நமதூரில் நடைபெற உள்ள பயான் ...


இன்ஷா அல்லாஹ் வருகிற ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் நமதூர் மேற்கு ஜாமிஆ மஸ்ஜித் மேல் வளாகத்தில் நடக்க இருக்கிறதுஅதுசமயம் சென்னை புரசைவாக்கம் ஆயிஷா பள்ளி இமாம்

புத்தகங்களை வாசிப்போம்! – வி.களத்தூர் பாரூக்

புத்தகங்கள் போன்று துன்பத்தில் இருக்கும் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தி முன்னேற்றத்தில் பங்கு வகிக்கவும், சுமைகள் தாங்கி இருக்கும் ஒருவனை அதை மறக்கடித்து செயலாற்றவும் செய்கின்ற ஒரு நல்ல நண்பனை பார்க்க முடியாது.
எந்த குறிக்கோளும் இல்லாதவனாக இருந்தவனைக்கூட பெரிய லட்சியவாதியாக மாற்றி இருக்கிறது. சாதாரண மனிதனைக்கூட புரட்சியாளனாக மாற்றியுள்ளது. கெட்ட எண்ணம் கொண்ட ஒருவனைக்கூட நல்ல மனிதராக மாற்றி இருக்கிறது. அதனால் தான் “நூல்

அரசியல் மீளாய்வு செய்ய வேண்டிய தருணத்தில் ம.ம.க

1990களின் காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் சூழல் மட்டுமின்றி, வழி நடத்த முறையான தலைமையின்றியும் தவித்துக் கொண்டிருந்தது முஸ்லிம் சமூகம். இந்தியா முழுவதும் காவல்துறையின் அடக்குமுறைகளும், அரச  பயங்கரவாதத்தின் கோர முகங்களும் முஸ்லிம்களை நோக்கி பாயாத நாட்களே என்று சொல்லலாம். இது தமிழகத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேலப்பாளையம், கோவை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. 

கோவையில் மமக பொதுக்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்!

கோவை: கோவையில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஜவாஹிருல்லாஹ், தமீமுன் அன்சாரி

இந்திய ரயில்களில் அதிகாரிகள் உதவியுடன் போலி தண்ணீர் பாட்டில்! - சி.பி.ஐ தகவல்

இந்திய ரயில்களில் விற்கப்படும்  ‘ரயில் நீர்’ பாட்டில்களுக்கு பதிலாக போலியான தண்ணீர் பாட்டில்கள் விற்கப்பட்டுள்ளது சி.பி.ஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த முறைகேடு ரயில்வே

புதன், 14 அக்டோபர், 2015

நமக்கு நாமே பயணம் லெப்பைக்குடிக்காடு மு.க.ஸ்டாலின் வருகை ( பகுதி - 1 )


மேற்கு பள்ளி வாசலுக்கு சரியாக பகல் 12 மணியளவில் மு..ஸ்டாலின் மேற்கு மஹல்லா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்.

நமக்கு நாமே பயணம் - லெப்பைக்குடிக்காடு மு.க.ஸ்டாலின் வருகை (பகுதி - 2)



கிழக்கு பள்ளி வாசலில் சரியாக பகல் 12:40 மணியளவில் மு..ஸ்டாலின் கிழக்கு மஹல்லா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்.

கற்க கசடற ....


பணம் இருந்தால் மட்டுமே இனி கல்வி என்ற நிலையை கொண்டுவர நமது இந்திய அரசு ஆயத்தம்.

நமதூர் வெள்ளாறில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆற்றில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி நேற்றிரவு உயிரிழந்தனர்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெரங்கியம் கிராமத்தை

திங்கள், 12 அக்டோபர், 2015

நீண்ட நாட்களுக்கு பிறகு நமதூர் ஆற்றில் தண்ணீர் ...


நமதூர் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வரவு. கடந்த சில நாட்களாக

பாஜக அரசுக்கு செருப்படி: சாகித்திய அகாதமி விருதுகளை திரும்ப கொடுப்பது அதிகரிக்கிறது!

புதுடெல்லி:  மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்று பொய்ச் செய்தியைப் பரப்பி உத்திரப் பிரதேசத்தில் முஹம்மது அஃக்லாக் என்ற அப்பாவி முஸ்லிம் அநியாயமாக ஃபாசிச பயங்கரவாதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசாததைக் கண்டித்து பிரபல இலக்கியவாதி நயன்தாரா செஹ்கல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை அரசுக்கே திரும்ப அளித்தார். அவரைத் தொடர்ந்து வரிசையாக பலர் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசுக்கு திரும்ப அளித்து வருகின்றனர். இது பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

கற்பனையில் உறையும் இளைய இரத்தம்!

ஆதிக்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் போதெல்லாம் சிறு பொறியாய் எதிர்ப்புகள் கிளம்பாமல் இருந்ததில்லை. வீரத்திற்கு அடையாளமே எதிர்த்து போராடுதல்தான். வீரம் குறித்தும், போராட்டம் குறித்தும் நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கணிசமாக பெரும்பாலான நாடுகளுக்கு உண்டு.
போரில் பங்கெடுத்தல்தான் வீரம், போராட்டத்தை முன்னெடுத்தல்தான் வீரம், போராட்டத்தில் கலந்து கொள்ளல் வீரம், போராட்டத்தை ஆதரித்தல் வீரம் என்ற நிலைகளெல்லாம் சற்றே உயர மலையேறி முகநூலில் கருத்திடுவதுதான் வீரம் என ஆணித்தரமாக நம்பக்கூடிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சனி, 10 அக்டோபர், 2015

வியாழன், 8 அக்டோபர், 2015

சிந்திப்போம் ...

பிரிவினைகளும், புதிய இயக்கங்களின் வருகையும் தமிழகத்திற்கு புதியதல்ல.அதற்காக அழுது புலம்பியோ, வருத்தப்பட்டோ எந்த புண்ணியமும் கிடைக்கப்போவதில்லை.இன்றைய பெரும்பாலான இயக்கங்களிடம் அடுத்த ஐந்தாண்டுக்கான ஏதேனும் செயல்திட்டம் கைவசம் உள்ளதா?என்று கேட்டுப் பாருங்கள்!எதுவுமே இருக்காது.இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையை நெறிப்படுத்துவது எப்படி?இந்தியாவில் முஸ்லிம் அரசியல் கொள்கையை எவ்வாறு வடிவமைக்கவேண்டும்? பன்முக சமூகத்தில் நமது அரசியல்,

பிரிவு எதனால் - CMN சலீம்

அமைப்புகள் உடைவது குறித்த வேதனை 
தெரிவித்துள்ள சகோதரர்கள் இதற்கான அடிப்படை காரணம் 
என்ன என்பது குறித்து அதிகம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா ?


குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர் இருக்கும். தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது

தமிமுன் அன்சாரி ஓர் களப்போராளி....!!

தமிமுன் அன்சாரி ஓர் களப்போராளி....!!
தமிமுன் அன்சாரி நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர், MBA படித்தவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளராக இருந்தவர், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர்,

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

அய்… (சிறுகதை) ...

ஊருக்கு நடுவே அழகான முடி திருத்தும் நிலையம் வைத்திருப்பவர் அப்துல்லாஹ். அழகான மனைவி, இரண்டு ஆண் பிள்ளைகள், சிறந்த வருமானம் என்று வாழ்ந்து வந்தார். தினமும் இரவு வீட்டிற்க்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தின்பண்டங்களும் வாங்கிச் செல்வது வழக்கம்.
இஷா தொழுகை முடிந்த பின் இரு சகோதரர்களின் கண்களும் வீட்டு வாசலையே எதிர் நோக்கி இருக்கும் தந்தையின் வருகைக்காக…! தந்தையை கண்டவுடன் “அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா… உம்மா சேட்டை பண்ணிட்டேனு அடிச்சிட்டாங்க வாப்பா” என்றான் இளைய மகன் அய். “அப்பாடியா தங்கம்… அழாத… வாப்பா உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன். இனி சேட்டை பண்ணக் கூடாது” என்றார் அப்துல்லாஹ்.

இந்திய சிறைகளில் முஸ்லிம்கள் ...


1.இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள்.
2.விசாரணை கைதிகளில் மக்கள் தொகை கணக்கீட்டின்படி மற்ற மதத்தினரை விட முஸ்லீம்களே அதிக அளவில் உள்ளனர். விகிதாச்சாரபடி இந்துக்களை விட முஸ்லிம்கள் 2 மடங்கு உள்ளனர். 21 சதவீத முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ளனர்.

நமதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் - போஸ்டர்

கண்டுகொள்ளப்படா இந்திய முஸ்லிம்களின் குரல்கள்!

சிறைபட்டுக் கிடந்த சுதந்திரத்தை மீட்டெடுத்த கொண்டாட்டத்தினை ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் நாம் வெகு விமர்சையாக கொண்டாடினோம். சுதந்திர காற்றை இன்றைய சமூகம் சுவாசிக்க முடிகிறதெனில் பலரின் மூச்சுக் காற்றுகள் மூர்ச்சையான வரலாறுகள் ஏனோ திரிபுத் தத்துவங்களாக மாற்றப்பட்டுக் கிடக்கின்றன.
பெரும்பான்மை தத்துவங்கள்,

ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே ‘மேட்ச் பிக்சிங்’ நடைபெறுகிறது : சோனியா காந்தி

பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
பாகல்பூர் அருகே காஹல்கவானில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சோனியா காந்தி, சமூகத்தை துண்டாடும் சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இடையே ‘மேட்ச் பிக்சிங்’ நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

நேபாளம் மோடிக்கும் ஆமாம் சாமி போடும் நாடு அல்ல : அறிவிக்கபடாத பொருளாதர தடை விதித்துள்ளதாக இந்தியா மீது ஐநா சபையில் நேபாளம் புகார்

காத்மாண்டு:’இந்திய எல்லையை ஒட்டிய, முக்கிய, வர்த்தக முனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையால், நேபாளத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’ என, ஐ.நா., பொதுச் செயலரிடம், இந்தியாவுக்கு எதிராக, நேபாளம் புகார் கூறியுள்ளது. ‘நில எல்லை கொண்ட நாடுகள் இடையே, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதில் தடை இருக்கக்கூடாது’ எனவும், அந்நாடு வலியுறுத்தி உள்ளது.
நேபாளத்தில், புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு,

வெள்ளி, 2 அக்டோபர், 2015

புன்னகை தினம்!

புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை ...

தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர் பேராசிரியர் அ. மார்க்ஸ். கூடவே, பெரியாரியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இப்படிப்பட்ட கோட்பாட்டுப் பின்னணியைக் கொண்ட ஒருவர், காந்தியைப் பற்றித் தொடர்ந்து ஆக்கபூர்வமான சித்திரத்தை முன்வைத்துவருவது அரிதான விஷயம். அ. மார்க்ஸுடன் பேசியதிலிருந்து…
தீவிர இடதுசாரிக் கோட்பாட்டுப் பின்புலத்திலிருந்து காந்தி நோக்கி நகர்ந்தது எப்படி?

ஆறுதல் கூறக்கூட கிராமவாசிகள் யாரும் வரவில்லை - கிராமத்தை விட்டு வெளியேறும் அக்லாக்கின் குடும்பம்!

ஆறுதல் கூறக்கூட கிராமவாசிகள் யாரும் வரவில்லை - கிராமத்தை விட்டு வெளியேறும் அக்லாக்கின் குடும்பம்!
புதுடெல்லி: பசு இறைச்சியை சாப்பிட்டதாக குற்றம் சாட்டி உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி பிசோதா கிராமத்தில் இந்துத்துவ வன்முறைக் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட முஹம்மது அக்லாக்கின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர்.இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவர்கள் தீர்மானித்துள்ளனர்.