Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 2 அக்டோபர், 2015

ஆறுதல் கூறக்கூட கிராமவாசிகள் யாரும் வரவில்லை - கிராமத்தை விட்டு வெளியேறும் அக்லாக்கின் குடும்பம்!

ஆறுதல் கூறக்கூட கிராமவாசிகள் யாரும் வரவில்லை - கிராமத்தை விட்டு வெளியேறும் அக்லாக்கின் குடும்பம்!
புதுடெல்லி: பசு இறைச்சியை சாப்பிட்டதாக குற்றம் சாட்டி உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி பிசோதா கிராமத்தில் இந்துத்துவ வன்முறைக் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட முஹம்மது அக்லாக்கின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர்.இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கொல்லப்பட்ட அக்லாக்கின் தாயார் அஸ்கரி கூறுகிறார்:”எனது மகன் அடித்துக் கொல்லப்பட்டு இரண்டு தினங்கள் கழிந்துவிட்டன.கிராமத்தில் ஒருவர் கூட ஆறுதல் கூற வீட்டிற்கு வரவில்லை.சொந்த கிராமத்தினரே தாக்கிய இடத்தில் எவ்வாறு வாழ முடியும்?எவ்வாறு நாங்கள் அவர்களை நம்ப முடியும்?முன்பு வழக்கமாக எங்கள் வீட்டிற்கு வருபவர்களும் வன்முறையாளர்களுடன் இருந்தனர்.காலைப் பிடித்து கதறி அழுத பிறகும் வன்முறையாளர்கள் விடவில்லை.உதவிக்காக குரல் எழுப்பியபோது அண்டைவீட்டார் எட்டிப் பார்க்கவில்லை.காயமடைந்த தானிஷ் குணமடைந்த பிறகு வேறு இடத்தில் வசிப்பதற்கான ஏற்பாடுகளை துவக்கவேண்டும்.இப்போது வசிக்கும் வீட்டை யார் வாங்குவார்கள்?வீட்டை விற்பதற்கு அரசு உதவும் என்று நம்புகிறேன்’ தாக்குதலில் காயமுற்ற கண்ணை பொத்தியவாறு அஸ்கரி தெரிவித்தார்.
கடந்த திங்கள் கிழமை இரவு 10 மணியளவில் அக்லாக் வீட்டில் பசு இறைச்சியை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதாக அருகில் உள்ள கோயிலில் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சுற்று வட்டாரங்களைச் சார்ந்த வன்முறைக் கும்பல் அக்லாக்கின் வீட்டை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தியது.இதில் அக்லாக் படுகொலைச் செய்யப்பட்டார்.அவரது மூத்த மகன் தானிஷ் கடுமையாக காயமடைந்தார்.அக்லாக்கின் 18 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யவும் வன்முறைக் கும்பல் முயற்சித்துள்ளது.ஆனால், அவர் அதிலிருந்து தப்பிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக