Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 8 அக்டோபர், 2015

பிரிவு எதனால் - CMN சலீம்

அமைப்புகள் உடைவது குறித்த வேதனை 
தெரிவித்துள்ள சகோதரர்கள் இதற்கான அடிப்படை காரணம் 
என்ன என்பது குறித்து அதிகம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அமைப்பு நிறுவன சட்டத்தில் ( Society Act )பதிவு செய்யப்பட்டு 
துவங்கப்பட்டுள்ள எந்த அமைப்பானாலும் அது உடையவே செய்யும்.
காரணம் சமூகத்தில்குழப்பம் உண்டாக்க உருவாக்கப்பட்ட 
யூதர்களின் திட்டம் அது.

ஆகையால்....
தேர்தல் அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களது கல்வி
ஆய்வு பேச்சாற்றல் எழுத்தாற்றல் ஆகிய திறமைகளை 
கொண்டு தலைமைக்கு ஆதரவாக தலை ஆட்ட வேண்டும்.

சுயமாக சிந்துப்பது என்பது தேர்தல் அரசியலுக்கு எதிரான
செயல்.

இதை எல்லா கட்சியும் அதன் உறுப்பினர்களுக்கு தெளிவு 
படுத்தியுள்ளன. இதை தேர்தல் அரசியலில் ஈடுபடும் முஸ்லிம் 
சகோதரர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் .

தேர்தல் திருவிழாவில் கொள்கை கோட்பாடு சமுதாய நலன் 
பாவம் புண்ணியம் உழைப்பு தியாகம் இதெல்லாம் மூளை 
இல்லாதவர்களின் முதிர்ச்சி அற்ற பேச்சாகவே கருதப்படும்.

இதைத் தாண்டி.......
சமுதாயத்திற்காக 20 ஆண்டு காலம் உழைத்த ஒரு இளைஞன்....
இளமை துடிப்பில் சமுதாய பாசத்தில் முதிர்ச்சி இல்லாமல் செய்த 
செயலுக்காக அந்த சமுதாய அமைப்பினாலேயே அவனது உழைப்பும் 
தியாகமும் அலட்சியப்படுதப்படுவது ஆபத்தானது.

சமூக அரசியல் தளத்தில் சேவையாற்ற துடிக்கும் இளைஞர்களை 
வராதே என்று துரத்தி அடிக்கும் செயல்.

இஸ்லாமிய அரசு 
அதன் சித்தாந்தத்தில் சமூக அமைப்பு கட்டுதல் 
கருத்து வேறுபாடுகளை எதிர் கொள்ளுதல் 
அவசரப்படும் இளைஞர்களை முதிர்ச்சியோடு அரவணைத்தல் 
ஆகியவற்றை மற்றவர்களை காட்டிலும் பெரிதும் விளங்கியுள்ள 
பேராசிரியரின் தலைமையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது 
வரலாற்றுப் பிழை.

பிளவு அதிகரித்து வருகிறது.
அறிவு முதிர்ச்சியை காட்டுங்கள்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் புதிது புதிதாக அரசியல் அமைப்புகள்
உருவாவதை முஸ்லிம் சமூகம் வெறுக்கின்றது.

அதேபோல இருக்கின்ற எந்த இஸ்லாமிய அமைப்பும் 
பிளவு படுவதையும் சமுதாயம் வெறுக்கின்றது.

வெறுப்பை சம்பாதிக்கும் எந்த 
வேலையையும் எந்த காரணதிற்காகவும் மமக செய்ய வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக