Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 14 அக்டோபர், 2015

நமக்கு நாமே பயணம் - லெப்பைக்குடிக்காடு மு.க.ஸ்டாலின் வருகை (பகுதி - 2)



கிழக்கு பள்ளி வாசலில் சரியாக பகல் 12:40 மணியளவில் மு..ஸ்டாலின் கிழக்கு மஹல்லா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்.

அப்போது கிழக்கு மஹல்லா தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் ஊரில் உள்ள பல பிரச்சனைகளை எடுத்துரைத்ததோடு இது சம்மந்தமான மனு ஒன்றையும் அளித்தார்.
மேலும், வருங்கால முதல்வர் மு..ஸ்டாலின்தான் எங்களின் முழு ஆதரவு எப்போதும் தி.மு. விற்கு உண்டு என்ற வாக்குறுதி வழங்கினார்
மனுவை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் நல்லதொரு தீர்வை தமது தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார்.













நன்றி குளோபல் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக