Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 21 அக்டோபர், 2015

நமதூரில் ஏற்பட்ட மின் கம்பம் விபத்தில் பணியில் பின்னடைவு, இதனால் மின்சாரம் இன்றும் வருவது சந்தேகம் ..


நமதூர் 9 வது வார்டு கிழக்கு தெற்கு தெரு (பெண்ணக்கோணம் சந்து அருகில்) வில் நேற்று இரவு கிட்டதட்ட 11 மணி அளவில் அடையாளம் தெரியாத லாரி
மின்கம்பத்தில் இடித்ததில் பெரும் சத்தம் ஏற்பட்டது.இதில் மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்தன. உடனடியாக அந்த பக்கத்தில் இருந்த மக்கள் சத்தத்தை கேட்டவுடன் வெளியோ வந்து பார்த்தனர்.அதற்குள் அந்த வண்டியை காண வில்லை.
இதனால் மின்சாரம் முற்றிலும் தடைபெற்றன. இன்று காலையிலிருந்து மின்சாரத்துரையினர் இதனை சரி செய்ய தூரித நடவடிக்கை மேற்கொண்டனர். இரவு 7 மணி வரை கரண்ட் வர வில்லை.
கம்பம் பரிக்க பல்லம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்ததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் இன்றும் கரண்ட் வராது என 9 மற்றும் 10 வார்டு மக்கள் வீதியில் (தெருவில்) காத்து கிடைக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு 9 மற்றும் 10 வார்டு கவுண்சிலர்கள் தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் அவா.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக