Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

இந்திய சிறைகளில் முஸ்லிம்கள் ...


1.இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள்.
2.விசாரணை கைதிகளில் மக்கள் தொகை கணக்கீட்டின்படி மற்ற மதத்தினரை விட முஸ்லீம்களே அதிக அளவில் உள்ளனர். விகிதாச்சாரபடி இந்துக்களை விட முஸ்லிம்கள் 2 மடங்கு உள்ளனர். 21 சதவீத முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ளனர்.
3.இதில் உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தான் விசாரணை கைதிகளில் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர்.
19 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் முஸ்லிம்கள் :
***********************************************************************
1.தமிழக சிறைகளில் சுமார் 50 முஸ்லிம் சிறைவாசிகள் 16 ஆண்டுகள் முதல் 19 ஆண்டுகள் வரை சிறையில் இருந்து வருகிறார்கள் .
2.சாதாரணமாக ஒரு ஆயுள்தண்டனை கைதி 13 ஆண்டுகள் கழித்தவுடன் ஜெயில் Manual படி மாவட்ட நீதிபதி .மாவட்ட கலெக்டர் .ஜெயில் கண்காணிப்பாளர் மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரை கொண்ட ”Advisory Board ” அவரின் மனுவை பரிசீலனை செய்து 14 வருடத்தில் அவரை விடுதலை செய்வார்கள் …
3.ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் அனைவருமே 15 வருடத்திற்கு மேல் சிறையில் கழித்திருந்த போது கூட அவர்களுக்காக அட்வைசரி போர்டு கூட்டப்படவே இல்லை …
திமுக ஆட்சியில் விடுதலை செய்ய வழிஇருந்தும் மறுப்பு:
**************************************************************************************
1.அரசியல்சாசனமே நம் நாட்டில் உயர்ந்தது, அந்த அரசியல் சாசனம் பிரிவு 161 ன்படி மாநில கேபினெட் அமைச்சர்கள் குழு ஆயுள் கைதிகள் அல்லது தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக முடிவுசெய்து அதனை மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்தால் அதனை ஏற்று அவர் பரிந்துரைக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடுவார் , இது அரசியல் சாசனம் மாநில ஆளுநருக்கு வழங்கியுள்ள உரிமை
என்பதால் இதில் சுப்ரீம் கோர்ட் கூட தலையிட முடியாது .. ..
2.இந்த 161 பிரிவின்படிதன் கலைஞர் அரசு வருடாவருடம் அண்ணா பிறந்தநாளின்போது கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்தது எல்லோரும் அறிந்த ஓன்று
3.2008 ம் வருடம் கூட வெறும் 7 வருடம் சிறை தண்டனை அனுபவித்திருந்த சுமார் 1405 கைதிகளை விடுதலை செய்தார் .. ஆனால் அப்போது 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருந்த சுமார் 80 முஸ்லிம் சிறைவாசிகளில் ஒருவரைக்கூட விடுதலை செய்யவில்லை ..
4.இன்னும் ஒரு படி மேல் சென்று – மதுரை லீலாவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொடூர குற்றவாளிகளை 8 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்திருந்த போதும் அவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
5.ஆனால், விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் முஸ்லிம்கள் சிறைவாசிகளுக்கு இருந்தும் கலைஞர் அரசு இவர்களை விடுதலை செய்ய ஏனோ முன்வரவில்லை. அதற்காக புதிதாக சில காரணங்களை முன் வைத்தார்கள். அந்த காரணங்கள் அனைத்தும் சட்டத்தில் இடம் பெறவில்லை.
6.இத்தனைக்கும் கோவை உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அவை அனைத்தையும் மத பிரச்சினைகளால் ஏற்பட்ட மோதல்கள் அல்ல என்றே தங்களுடைய தீர்ப்புக்களில் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
.7ஆக அரசியல் சாசனம் இவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் கூட முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக இவர்களுக்கு மறுக்கப்பட்டது .
தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு:
*****************************************************************
1.நம் நாட்டின் சிறைச்சாலைகளில், விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக இருப்பது முஸ்லிம்கள் மட்டுமே என்ற ஒரு அறிக்கையை நீதிபதி சச்சார் கமிட்டி இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கண்ட அதே நிலை தொடருவதை மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர். அ. மார்க்ஸ் போன்றவர்கள் உறுதிபடுத்துகிறார்கள்.
2.கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் நடைபெறாத விடுதலை ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியில் நடக்குமா என்ன? என்ற கேள்வியை கொண்டே முஸ்லிம்கள் மௌனம் காத்து வந்தனர்.
3.ஆனால் சமீபத்தில் ஜெயலலிதா அவர்களுடைய அரசு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் மற்றும் ஆறு நபர்களுடைய விடயத்தில் எடுத்திருக்கும் முடிவை தமிழக மக்கள் அதிகமானோர் ஆதரிக்கும் பட்சத்தில் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மீதும் கருணை காட்டப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த நன்றி உணர்வோடு பார்க்கும் அல்லவா ?
இந்தியமக்களின் கவனத்திற்கு :
**************************************************
1.2010 ம் ஆண்டு இந்த சிறைவாசிகளின் குடும்பத்தார் ” அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பினரை அணுகி இவர்களின் விடுதலைக்காக போராடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர் .
2.பொறுப்புணர்வு உள்ள அமைப்புக்கள் தங்களால் முடிந்த
உதவிகளை செய்து வருகின்றது ….அது பாராட்டப்படவேண்டிய விஷயம் .ஆகும் ..
3. ஆனால் இன்னும் சிறைக்கதவுகள் திறக்கப்படவில்லை
என்றால் போராட்டத்தில் தான் குறை என்பது தெளிவாகின்றது …
4.சிறைவாழ் முஸ்லிம்களின் விடுதலை என்பது முஸ்லிம்களின் பிரச்சினையாக பார்க்காதீர்கள் … மாறாக ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரச்சினையாக பார்க்க வேண்டும் .
5.குறிப்பிட்ட சாரர் மீது நிகழ்த்தப்படும் நேரடி அடக்குமுறை நாளை நீதி மறுக்கப்பட்ட வேறு சமுதயாத்தின் மீதும் நிகழத்தப்படலாம் …தமிழக முஸ்லிம்கள் மட்டும் அல்லாது இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இது குறித்து கேள்வி கேட்க வேண்டும் ….
6.மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்,பொதுமக்கள் இது போன்ற விடயங்களில்
தொடர் ஒத்துழைப்பு தரவேண்டும்..
7.முஸ்லிம்கள் மீது தொடங்கப்பட்ட பிரச்சினை வருங்காலங்களில்
ஏனைய சமுதாயங்களின் மீதும் கட்டு அவிழ்க்கப்படலாம்..இதனை
தவிர்க்க இந்திய மக்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவி செய்து
கொள்ள வேண்டும்.
8.தாய்மார்கள், குழந்தைகள், வயதானவர்கள் கண்ணீரை துடைக்க
அப்பாவி மக்கள் கைது, பொய் வழக்கிற்கு எதிராக அமைப்புக்கள்
உருவாக்கப்பட்டு பொதுமக்கள் வீதிக்கு வர வேண்டும்
9.ஒட்டு தமிழக முஸ்லிம்களும், இந்திய மக்களின் ஆதரவோடு ஒற்றுமையாக இறங்கினால் தவிர கைதிகளின் குழந்தைகளின்
முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது …

-அபூஷேக் முஹம்மத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக