Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நேபாளம் மோடிக்கும் ஆமாம் சாமி போடும் நாடு அல்ல : அறிவிக்கபடாத பொருளாதர தடை விதித்துள்ளதாக இந்தியா மீது ஐநா சபையில் நேபாளம் புகார்

காத்மாண்டு:’இந்திய எல்லையை ஒட்டிய, முக்கிய, வர்த்தக முனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையால், நேபாளத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’ என, ஐ.நா., பொதுச் செயலரிடம், இந்தியாவுக்கு எதிராக, நேபாளம் புகார் கூறியுள்ளது. ‘நில எல்லை கொண்ட நாடுகள் இடையே, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதில் தடை இருக்கக்கூடாது’ எனவும், அந்நாடு வலியுறுத்தி உள்ளது.
நேபாளத்தில், புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு,
அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை, ஏழு மாகாணங்களாக பிரிக்க, அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், இந்தியா தலையிடுவதாக குற்றம்சாட்டி, கடந்த சில நாட்களாக, நேபாளத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பொருளாதார தடை?: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மைகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், நேபாளம் மீது இந்தியா, அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை திணிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
நேபாளத்தில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களால், இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வது தடைபட்டுள்ளது. முக்கிய பொருட்களின் வரத்து நின்று போனதால், அவற்றின் விலை அங்கு கடுமையாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய தலைவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், இந்தியாவுக்கு எதிராக, ஐ.நா., பொதுச் செயலரிடம், நேபாளம் புகார் கூறியுள்ளது.

நேபாளத் துணை பிரதமர் பிரகாஷ் மான்சிங் தலைமையில், ஐ.நா., பொதுச்சபை சென்றுள்ள குழுவினர், ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூனை சந்தித்து பேசியுள்ளனர்.இதுகுறித்து, நேபாள அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நில எல்லை கொண்ட நாடுகள் இடையே, அத்தியாவசிய பொருட்கள், தங்கு தடையின்றி சுதந்திரமாக எடுத்துச் செல்வதை, சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள வர்த்தக முனையில், பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது என, நேபாள
தலைவர்கள் புகார் கூறியுள்ளனர். நேபாளம் போன்ற வளரும் நாடுகள், கடல் வழிப்பாதையை தடையின்றி பயன்படுத்த, உலக சமுதாயம் உதவி செய்ய வேண்டும் என்றும், நேபாளத் துணை பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

நேபாளம் – இந்தியா இடையிலான, எல்லையில், வர்த்தக முனையில் ஏற்பட்டுள்ள தடையால், நேபாளத்துக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாமல் போவதற்கு, பான்-கி-மூன் வருத்தம் தெரிவித்தார். நேபாள பார்லிமென்டில், புதிய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு, அவர் பாராட்டு தெரிவித்தார்.
நேபாளத்தில், இந்து மாதேசிக்கள் உட்பட, போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பல்வேறு குழுக்களுடன் பேச்சு நடத்த, நேபாள அமைச்சர்கள் குழு, விதிமுறைகளை உருவாக்கி இருப்பதை, பொதுச் செயலர் வரவேற்றுள்ளார்.
நொறுங்கி வரும் நட்புறவு: இந்தியா – நேபாள நாடுகளை, இந்து மத உணர்வு நெருக்கமாக பிணைத்திருப்பதாக கூறப்படும் கருத்துக்கள், சமீப காலமாக பொய்த்துப் போகும் நிலை உருவாகி உள்ளது. இந்தியா – நேபாளம் இடையே, தற்போது ஏற்பட்டுள்ள மனக் கசப்பின் பின்னணியில், நேபாளத்தின் புதிய அரசியல் சாசனம் உள்ளது. இந்த அரசியல் சாசனத்தால், இந்திய வம்சாவளி நேபாள மக்களான, மாதேசிக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என, இந்தியா நினைக்கிறது. ஆனால், மாதேசி ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு வரும் அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி வருவதாக கருதும் நேபாள மக்கள், கடும் கோபத்தில் உள்ளனர்.
‘நேபாளத்தின் மீது அறிவிக்கப்படாத தடையை இந்தியா ஏற்படுத்தி உள்ளது’ என, நேபாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள், நேபாளத்தில், தினசரி
நிகழ்ச்சிகளாகிவிட்டன. இந்திய ஆதரவாளராக கருதப்படும், சுஷில் கொய்ராலா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சுஷில் கொய்ராலா கட்சியான, நேபாளி காங்கிரஸ்,
‘இந்தியாவின் அடிவருடி’ என, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியினரால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

சீதாதேவி பிறந்த இடம்: கடந்த ஆண்டு, இந்திய பிரதமர் மோடி, நேபாளம் சென்றிருந்தபோது, ராமபிரானின் மனைவியான சீதா தேவி பிறந்த ஊராக கருதப்படும், ஜானக்பூருக்கு செல்ல
விரும்பினார். நேபாளத்தை பல்வேறு மாகாணங்களாக பிரிக்கும் விஷயத்தில், அந்நாட்டு கட்சிகள் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமயத்தில், மோடியின் ஆசை, அவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதை அறிந்து, கடைசி நேரத்தில், ஜானக்பூர் பயணத்தை மோடி ரத்து செய்ததாக தெரிகிறது.

ஆமாம் சாமிகள் அல்ல! மாவோயிஸ்ட் தலைவர் புஷ்பா கமல் தாஹல், ”நாங்கள் யாருக்கும், ‘ஆமாம்’ போடும் மனிதர்களாக இருக்க மாட்டோம்,” என, மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். நேபாளத்தின் அடுத்த பிரதமராக பதவி ஏற்பார் எனக் கூறப்படும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி.ஒலி, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்தியாவுக்கு எதிராக, நேபாளத் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது, இரு நாட்டு உறவை கடுமையாக பாதித்துள்ளது. ’1989க்கு பின், இருநாட்டு உறவு இந்தளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது, இப்போது தான்’ என, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக