Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

மௌனம் கலைத்தது சாகித்ய அகாடமி குழுமம்!.

சகிப்புத்தன்மைக்கு எதிரான போக்கு நாட்டில் அதிகரித்து வருவதை கண்டித்து எழுத்தாளர்கள் திருப்பிக்கொடுத்த சாகித்ய அகாடமி விருதுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அகாடமி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் முதியவர் படுகொலை, எழுத்தாளர் சுசீந்திர குல்கர்னி, காஷ்மீர் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் மீது இந்துத்துவா அமைப்பினரின் கருப்பு மை வீச்சு தாக்குதல்கள் என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராகவும் எழுத்தாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடைபெறும் சம்பவங்களை சாகித்ய அகாடமி கண்டிக்கவில்லை என படைப்பாளிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.
இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக அகாடமியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் அகாடமியின் மொத்த செயற்குழு உறுப்பினர்களான 24 பேரில் 20 பேர் பங்கேற்றனர். அகாடமியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகிய மலையாள எழுத்தாளர் கே.சச்சிதானந்தன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் கொலையை கண்டித்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவை எல்லா எழுத்தாளர்களும் ஆதரித்தனர். கல்புர்கியின் கொலையைக் கண்டித்து ஒரு மனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி, துணைத் தலைவர் சந்திரசேகர் காம்பர் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். கன்னட எழுத்தாளர் கல்புர்கியின் கொலைக்கு அகாடமி கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. இத்தகைய சம்பவங்கள் இனிமேல் நடைபெறாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்எழுத்தாளர்களால் நடத்தப்படும் கண்ணியமிக்க அமைப்பு சாகித்ய அகாடமி. எனவே எழுத்தாளர்கள் இதுவரை திருப்பிக்கொடுத்த சாகித்ய அகாடமி விருதுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பிறகு சாகித்ய அகாடமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து கூறுகையில், சகிப்புத்தன்மையற்ற போக்கு அதிகரித்து வருவதை கண்டிக்க வேண்டும் என்ற எழுத்தாளர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இதுபற்றி சாகித்ய அகாடமி விரிவான அறிக்கை வெளியிடும். வரும் டிசம்பர் 17-ம்தேதி அகாடமி செயற்குழு கூட்டம் நடைபெறும். விருதுகளை எழுத்தாளர்கள் திருப்பித் தருவதால் உருவாகும் சூழல் பற்றி அப்போது விரிவாக விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அகாடமி அவசர செயற்குழுக் கூட்டத்துக்கு முன்பாக எழுத்தாளர்களும் ஆதரவாளர்களும் டெல்லியில் நேற்று ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக