Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 டிசம்பர், 2014

நமது நிருபரும் மழலையின் சிறிப்பும் ….

நமது நிருபரும் மழலையின் சிறிப்பும் …. 
 
அல்லாஹ்வின் நாட்டப்படி கடந்த இரண்டு நாட்களாக (சனி மற்றும் ஞாயிறு) நமதூர் தாருஸ்ஸலாம் மழலையர் பள்ளியின் 3 ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக கடந்த ஜூம்மாவில் தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் அறிவிப்பு செய்தார்கள். கிழக்கு மற்றும் மேற்கு பள்ளிவாசலில் துண்டு பிரசுகமும் வினியோகிக்கப் பட்டது.

இந்த அறிவிப்பிற்கினங்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகளை ஆர்வமூட்டும் வகையில் கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தனிப்பட்ட முறையில் நமது நிருபர் கலந்து கொண்ட பொழுது குழந்தைகள் அவர்களுடைய செய்முறை விளக்கங்களை கூறிய முறையை கண்டு நமது நிருபர் நெகிழ்ந்தார்.


அதில் பல குழந்தைகள் தங்களின் பல விதமான திறமைகளை கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கங்கள் கொடுத்தாலும் அதில் தனது பங்கிற்கு எளிய முறையில் குழந்தைகளுக்கு கூடுதல் விளக்கங்களை நமது நிருபர் கொடுத்தார்.



அதில் நடந்த சுராஸ்ஸியமான சம்பவத்தை கூற கடமைப்பட்டு இருக்கிறார் நமது நிருபர்.
ஒரு குழந்தை பிளாஸ்டிக் பொருட்களினால் மனிதர்களுக்கு பல தீங்கு ஏற்படும் என்று கூறினார். மேலும் பல நோய்கள் வரவும் காரணமாக அமையும் என்று அறிவித்தார். அதற்கு நமது நிருபர் எப்படிபட்ட நோய் உருவாகும் என்று கேட்டதற்கு அதனுடைய மழலை சிறிப்பே பதிலாக இருந்தது.

அந்த மழலைச்சிறிப்பிற்கு நமது நிருபர் கொடுத்த விளக்கம் அதனுடைய ஆசிரியர்கே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. அதாவது குழந்தைகளுக்கு விளங்கும் விதமாக.

1.பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கேன்ஸர் என்ற புற்றுநோய் உருவாகிறது.
2.நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் இதனால் குடிநீர் தட்டுப்பாடு எற்படும் என்று விளக்கமளித்தார்.

இதனை செவியுற்ற அக்குழந்தை பின் வரக்கூடிய மக்களுக்கு கொடுத்த அவ்விளக்கத்தை பார்த்து மண நெகிழ்வோடு விடை பெற்றார் நமது நிருபர்.

இந்த சிறிய பள்ளிக்கூடம் நடத்திய அறிவியல் கண்காட்சி மற்றும் கொடுத்த விளக்கங்களை பார்த்தால் நமதூர் பெரிய கல்வி கூடங்களுக்கு பொரும் சவாலாக அமையும் என்றால் அது மிகையல்ல.

ஆசிரியர் குழுவின் பரிந்துரை
1.அறிவியல் மற்றும் வரலாற்று ரீதியான முஸ்லிம்களின் கண்டுபிடிப்பு பற்றி வைத்திருக்கலாம்.
2.குர்ஆன் கூறும் விஞ்ஞான விளக்கங்கள் மிகவும் குறைவு.
3.பொதுமக்களின் அழைப்பில் சற்று தொய்வாக காணப்பட்டது.

நமதூர் மூலக்காரணியாக கருதப்படும் தாருஸ்ஸலாம் மழலையர் பள்ளி , தொடர்ந்து 3 ஆம் ஆண்டாக நடாத்தப்படும் இந்த அறிவியல் கண்காட்சியை இந்த பள்ளி மாணவ மாணவியரின் அறிவு வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றமாக கருதுவோம். தாருஸ்ஸலாம் மார்க்க மற்றும் சமுக பணிகள் தொடரட்டும்.










நன்றி
நமது நிருபர் மற்றும் நமது பெண் நிருபர்





1 கருத்து: