Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான ஆர்ப்பாட்டம்!
டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் “பாபரி மஸ்ஜித் - என்றும் நம் நினைவில்” இடித்த இடத்தில் மீண்டும் கட்டு! இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசம்
முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 06-12-2014 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் (காந்தி சிலை) முன்பு நீதிக்கான ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் A.ஆபிருதீன் மன்பஈ அவர்கள் கண்டனயுரையாற்றினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செற்குழுஉறுப்பினர் ரியாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினர்.
இதில் திரளான மக்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.




மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக