Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 12 டிசம்பர், 2014

எபோலா சேவையால் உயிரிழந்த சியரா லியோன் நாயகன்!

உலகையே அச்சுறுத்தும் எபோலா நோய்க்கு எதிராக போராடிய மருத்துவக் குழுவுக்கு டைம் இதழின் ‘2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்’ விருது கிடைத்த செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த சூழலில் எபோலாவால் தானும் பாதிக்கப்படலாம் என்ற முன்னறிவிப்புடன் துணிச்சலாக எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க களத்தில் இறங்கி மரணத்தை சந்தித்த, சியரா லியோன் அரசால் தேசத்தின் நாயகன் என அறிவிக்கப்பட்ட டாக்டர் ஷேக் உமர் கான் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சியரா லியோனில் டாக்டர் ஷேக் உமர் கான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்றி வந்தார். இவ்வேளையில், மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் பரவத் தொடங்கிய எபோலா நோய்க்கும் டாக்டர் கான் எபோலா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்துள்ளார். லஸ்ஸா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சையளித்து வந்த அனுபவமும் நோயாளிகள் மீதான அவருடைய அக்கறையும் சில நோயாளிகள் குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்ப உதவியிருக்கின்றன. இதன் காரணமாக சியரா லியோன் அரசு அவரை தேசத்தின் நாயகனாக அறிவித்தது.
எபோலா போன்ற நோய்கள் தம்மையும் தாக்கக் கூடும் என்று அவருக்கு நிச்சயம் தெரியும். அவரே அதை கூறியிமிருக்கிறார். ஆனால் தான் இந்த வேலையை விட்டு சென்றால் வேறு யார் வந்து இதை செய்வார்கள் என்று மருத்துவராக தொடர்ந்து தனது கடமையை செய்து வந்திருக்கிறார்.
ஆம், அவர் கூறியது போல யாரும் செய்யத் தயங்கும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வந்த டாக்டர் கானுக்கும் எபோலா தொற்று ஏற்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம், தனது 39-வது வயதில் மரணமடைந்தார். கான் மட்டுமின்றி செவிலியர், ஆய்வக உதவியாளர் என இந்த ஆய்வில் பணியாற்றிய ஐவர் எபோலாவினால் உயிரிழந்துள்ளனர்.
சியாரா லியோனில் மகேரா கிராமத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தில் பத்து குழந்தைகளில் ஒருவராக பிறந்த கான் சிறுவயது முதலே டாக்டராக விரும்பியிருக்கிறார். படித்து பட்டம் பெற்ற பின் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெனெமாவின் அரசு மருத்துவமனையில் இரத்த ஒழுக்கு நோய் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஏழை நாடான சியரா லியோனில் லஸ்ஸா வைரசினால் ஆண்டுக்கு சுமார் 5,000 பேர் கொல்லப்படுகின்றனர். 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 150-க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். அதாவது 40,000 பேருக்கு ஒரு மருத்துவர். சீனாவில் 500 பேருக்கு 1 மருத்துவர், இந்தியாவில் 1,500 பேருக்கு 1 மருத்துவர், அமெரிக்காவில் 350 பேருக்கு 1 மருத்துவர் என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். லஸ்ஸா போன்ற வைரஸ், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் நோயாளிகளிடமிருந்து தொற்றும் அபாயத்தால் அங்கு சுகாதாரத்துறையில் வேலை செய்ய பலர் முன்வராத நிலை தான் ஏற்பட்டுள்ளது.
இக்கொடிய தொற்று நோய்கள் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க அங்கே போதுமான மருத்துவ வசதிகள் கூட இல்லாத நிலையில் தான் டாக்டர் ஷேக் உமர் கான் மற்றும் அவரது குழுவினர் எபோலாவுக்கு எதிராக போராடி உயிரை தியாகம் செய்துள்ளனர்.
உண்மையில் சியரா லியோனின் நாயகனான டாக்டர் ஷேக் உமர் கான் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள்.
எனினும் டாக்டர் ஷேக் உமர் கான் மற்றும் அவரது குழுவினரின் அதே சேவையை செய்துவரும் டாக்டர் ஜெர்ரி பிரவுனின் குழுவினருக்கு டைம் இதழ் அளித்த கவுரவம் அவர்களுக்குமான அங்கீகாரம் என்றே பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக