Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 18 டிசம்பர், 2014

அவசரம் ....


Engineering -  படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு IIT- ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம், IIT என்பது Indian Institute of Technology,  நமது  மக்களுக்கு இது எட்ட கனியாகவே உள்ளது, ஆனால் இதை சரியாக பயன்படுத்தி சிலர் மட்டுமே பயன் பெற்று வருகிறனர். இதை சரி செய்ய வேண்டும் என்றால் நாமும் நமது பிள்ளைகளை இது போன்ற உயர்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் , அல்லாஹ் நாடினால்.

IIT - ல் சேர   JEE Main நுழைவு தேர்வுக்கான  registration வரும் 18/12/2014 உடன் முடிவடைகிறது, அதற்க்குள் தங்கள் பிள்ளைகளை முன் பதிவு செய்து கொள்ளும் படி கேட்டுகொள்கிறோம்.

மின்னஞ்சல் மூலமாக
மில்லத் கல்வி அறக்கட்டளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக