Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 டிசம்பர், 2014

எபோலா நோய் மருத்துவக் குழுவுக்கு டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர் விருது!

அமெரிக்காவின் 'டைம்' இதழ் ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதரை தேர்ந்தெடுப்பதற்கான இணைய வாசகர்களுக்கான வாக்கெடுப்பு, கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதி துவங்கி, இந்த மாதம் (டிசம்பர்) 6-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த வாக்குகளின் முடிவின் அடிப்படையில்; உலகையே அச்சுறுத்திய எபோலா நோய்க்கு எதிராக போராடிய மருத்துவக் குழுவுக்கு ‘2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்’ விருது என்ற கவுரத்தை அளித்திருக்கிறது 'டைம்' இதழ்.
கொடிய நோயான எபோலாவுக்கு எதிராக போராடி வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவுக்கு 2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் கவுரத்தை அளித்திருக்கிறது 'டைம்' இதழ்.
எபோலா நோய்க்கு எதிராக போராடிய மருத்துவக் குழுவின் 37 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், எபோலா தொற்று ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த மருத்துவர் ஜெர்ரி பிரவுன், எபோலா நோய்க்கு தனது பெற்றோரை இழந்து, அவர்கள் மூலம் பாதிப்புக்குள்ளாகி, அதிலிருந்து பின்னர் மீண்ட சலோம் கர்வா, எல்லா வாட்சான் மற்றும் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் அமெரிக்க மருத்துவரும், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவர்கள் குழுவின் விளம்பரதாரருமான கென்ட் ப்ராண்ட்லிஹூ ஆகியோர் தாம் டைம் இதழின் கவுரவ நபர்கள்.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட டைம் இதழ், ‘உலக மக்கள் நிம்மதியோடு தூங்க மன உறுதியுடனும் கருணை உள்ளத்தோடும் தங்களது நேரத்தை முழுவதுமாக அளித்து எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க களத்தில் இறங்கிய தியாக உள்ளங்களை போற்றக்கூடிய வகையில் இந்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக’ டைம் இதழின் ஆசிரியர் நான்ஸி கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக