Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 27 டிசம்பர், 2014

காந்தியை சுட்டுக்கொன்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு!


சிட்டாபூர்: உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற ஹிந்துத்துவ ஃபாஸிஸ்ட் நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் துவங்கி விட்டதாக கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்சே நாட்டின் தேசியவாதி
கடந்த 1948ல் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதியான இவர் இந்த நாட்டின் தேசியவாதி என்று சமீபத்தில் பா.ஜ. எம்.பி. மகராஜ் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் அமளி எழும்பியது. இதனையடுத்து தனது பேச்சை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் அது வெறும் கண் துடைப்பே என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கோட்சேவுக்கு கோயில்
இந்நிலையில் உ.பி. மாநிலம் சிட்டாபூரில் ஆர்எஸ்எஸ்ஸின் தாய்க் கழகமான, பயங்கரவாதிகளின் ஊற்றுக்கண்ணான இந்து மகாசபை தீவிரவாதிகள் ஹிந்துத்துவ பயங்கரவாதி  கோட்சேவுக்குக் கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இதற்கென பலரிடம் நிதி வசூலித்து தேவையான தளவாடச் சாமான்கள் வாங்கியுள்ளதாக இந்த பயங்கரவாத அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
புனே கோர்ட்டில் நாளை விசாரணை
இதற்கிடையில் கோட்சே தொடர்பான ஜனவரி 30ல் ஒரு திரைப்படம் தயாரித்து வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஓன்று புனே நீதிமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Thanks : Thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக