Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 19 டிசம்பர், 2014

நிரபராதிகளை கொலை செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது: ஆப்கான் தாலிபான் கண்டனம்!


காபூல்: பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தாலிபான் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
நிரபராதிகளான குழந்தைகளை கொலை செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது. குழந்தைகள், பெண்கள் உள்பட நிரபராதிகளை கொலை செய்வது இஸ்லாத்தின் சட்டங்களுக்கு எதிரானது. அனைத்து இஸ்லாமிய அரசுகளும், இயக்கங்களும் இதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய சட்டங்களில் இருந்து யாரும் வழி தவறக் கூடாது.
இவ்வாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெஷாவர் பள்ளிக்கூடத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய தெஹ்ரீகே தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக