Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 23 டிசம்பர், 2014

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சந்தேகத்தை கிளப்பும் மர்ம நடவடிக்கைகள்!

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இரண்டு மாதம் முன்பு சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடனும், பாக்.தாலிபான் தலைவர்களுடனும் நடத்திய சந்திப்புக் குறித்து மர்மம் நீடிக்கிறது.பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை இதுத்தொடர்பான விரிவான புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பெஷாவரில் தாக்குதலை நடத்தியவர்கள், இந்தியாவால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்று பாகிஸ்ஹானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் சி.என்.என்.ஐ.பி.என்னுக்கு சில தினங்களுக்கு முன்பு அளித்த சிறப்பு நேர்முகத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.ஆப்கானில் உள்ள தெஹ்ரீகே தாலிபான் பாகிஸ்தான் தலைவர் மவ்லானா ஃபஸலுல்லாவுக்கு, பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இந்தியாவின் உளவுப்பிரிவான ‘ரா’விடமிருந்தும், ஆப்கான் அரசிடமிருந்தும் உதவிகள் கிடைத்துவருவதாக முஷாரஃப் குற்றம் சாட்டினார்.
ஐ.பியின் முன்னாள் தலைவருமான தோவல், முன்னர் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றியுள்ளார்.இந்திய உளவுத்துறையின் பல்வேறு வெளிநாட்டு ஆபரேசன்களில் பங்கேற்ற தோவல், பல முறை ஈராக் மற்றும் சிரியாவுக்கு ரகசிய பயணங்களை நடத்தியதாகவும், டெய்லி மெயில் பத்திரிகை கூறுகிறது.அலவி ஷியா சிறுபான்மை பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய உளவுத்துறையின் சில பிரிவுகளின் உதவியுடன் தோவல் ஐ.எஸ் தலைவர்களடை தொடர்புக் கொண்டாராம்.மேலும் இந்தியாவில் உள்ள சிரியா தூதருடனும் தோவலுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.தனது நாட்டு அரசு வசம் ஐ.எஸ் தலைவர்கள் குறித்த விரிவான தகவல்கள் இருப்பதாகவும், இதனை அஜித் தோவலுடன் பகிர்ந்துகொண்டதாகவும், இந்தியாவில் சிரியாவின் தூதர் ரியாத் கமால் அப்பாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இந்தியாவில் ஒரு முக்கிய தொலைக்காட்சி சானலும், ஒரு ஊடகக் குழுவும் தோவல் ரகசியமாக ஈராக்கிற்கு பயணம் மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.ஈராக்கில் சிக்கிய இந்தியர்களுக்கு உதவுவதற்காக என்று பின்னர் தோவலின் பயணம் குறித்து விளக்கமளிக்கப்பட்டாலும், இத்தகையதொரு ராஜீய பயணத்தை, இந்தியா ஏன் ரகசியமாக வைத்தது? என்று டெய்லி மெயில் கேள்வி எழுப்புகிறது.
ஐ.எஸ் தலைவர்களும், தெஹ்ரீகே பாக்.தாலிபான் தலைவர் முல்லா ஃபஸலுல்லா ஆகியோருடனான சந்திப்பிற்கு இந்தியாஇன் காந்தஹாரில்(ஆப்கான்) உள்ள துணைத்தூதரகம் மூலமாக தோவல் ஏற்பாடுச் செய்தார் என்பதை புலனாய்வில் கண்டறிந்ததாகவும் டெய்லி மெயில் கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக