Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 12 ஜனவரி, 2016

மத்திய கிழக்கு நாடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்


மத்திய கிழக்கு நாடுகளை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்

எண்ணெய் வளங்கள் செழிக்கும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் இயக்கத்தை விரிவுபடுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல இந்திய நிறுவன உரிமையாளர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் தலைவர் மோகன் பகவதிற்கும் பல ரகசிய சந்திப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்று கோஸ்டல் டைஜஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கேரளா மாநில அழுவா பகுதியில்
உள்ள தந்த்ரா வித்யா பீடத்தில் டாக்டர் பி.ஆர்.ஷெட்டி, உட்பட பல வெளிநாட்டுவாழ் இந்திய முதலாளிகளை மோகன் பகவத் இது தொடர்பாக சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிய வருகிறது. மேலும் இவர்களிடம் ஆர்.எஸ்.எஸ் இற்கு பொருளாதார அடிப்படையிலும் உதவி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு நிதி உதவி வருவது புதிதல்ல. மேலும் ஆர்.எஸ்.எஸ். இன் அபிமானிகள் அதிகம் வசிக்கும் அமீரகத்திற்கு சமீபத்தில் மோடி சென்று வந்தது இந்த சந்தேகங்களை வலுக்கச்செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக