Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டும் தமிழனும்! – வலசை ஃபைஸல்

ஜல்லிக்கட்டும் தமிழனும்! – வலசை ஃபைஸல்
ஜல்லிக்கட்டை தடை செய்வதன் பின்னணியில் Make in India, Made in India திட்ட கைகூலிகளின் கறை படிந்த கரங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் காசுகளுக்காய் காட்டு கூச்சல் இடுகின்றன.
ஜல்லிக்கட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் வீர விளையாட்டு, தமிழர்களின் பண்பாடு என்பதனை பறை சாற்றும் அதே நேரத்தில் தமிழர்களின் பால் உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கான ஒரு தளம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் அதிக வலுவுள்ள, திமில் கொண்ட காளைகள் தமிழகத்தில்தான் உண்டு. இது நமது மண்ணுக்கு இறைவன் கொடுத்த வரம். இனவிருத்திக்காக இந்தக் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. காளைகளை பராமரிக்கும் எங்களது பாரம்பரியத்தை இரண்டு மூன்று நாட்கள் எங்களுடன் வாழ்ந்து அறிந்து கொண்டு விலங்கின ஆர்வலர்கள் கருத்து கூறுங்கள்.
வீட்டின் ஓர் அங்கத்தினராய் வளர்க்கப்படும் காளைகள் ஆண்டுக்கு ஒரு முறை அவற்றின் உருவ அழகு, கொம்பின் நீளம், திமிலின் வீரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
பால் உற்பத்தியின் வாழ்வாதாரம் இனவிருத்தியடைதல். அதற்கு காளைகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். காளைகள் நன்கு பராமரிக்கப்படுகிறதா என்பதனை ஊர்ஜிதம் செய்யும் நிகழ்வுதான் காளை விரட்டு.
வீரம் தமிழர்களின் வாழ்வில் ஒன்றிக் கலந்ததால் தொழிலையும் வீரத்தோடு பிரகடனப்படுத்தும் நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டை தடை செய்வதனால் காளைகள் பராமரிப்பு குறைய ஆரம்பிக்கும். இனவிருத்திக்கு காளைகள் பற்றாக்குறை ஏற்படும். நம் கைவசம் உள்ள பால் உற்பத்தி தடைபடும்.
அந்த நிலை ஏற்பட்டால் பாலின் தேவைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழக்கம் போல் ஆரம்பிக்கும். தமிழர்கள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அகதிகளாய் கூலிக்கு மாரடிக்கும் நிலை உருவாக்கப்படும்.
அதற்கான முன்னோட்டம்தான் இந்தத் தடை.
வீரமும், விவேகமும் தமிழர்களின் பலம்.
பலம் கொண்டு எதிர்ப்போம். பன்னாட்டுக் கம்பெனிகளின் கைக்கூலிகளை கைபர், போலன் கணவாய் வழியாக விரட்டியடிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக